குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்

கும்பம்

டினமான உழைப்பாளி நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீட்டுப் ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு பிரச்னைகளைப் பெரிதுப்படுத்தவேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, கல்யாணம் குறித்து கவலைகள் வந்துபோகும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்துத் திருமணம் முடிப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பேச்சில் கவனம் தேவை; வீண் விமர்சனங்கள் எழும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள். சொத்து ஆவணங் களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். நல்ல வசதியான வீட்டுக்கு சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் சப்தமாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பாதிக்கும். அவர் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்க சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடும். ஆரோக்கி யத்திலும் அக்கறை தேவை. பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கு விஷயத்தில் குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். காப்பீடுகளைச் சரியாகப் புதுப்பிக்கவும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் தைரிய ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், இளைய சகோதர வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களில் சிலர் வேலை மாறவும் வாய்ப்பு உண்டு.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்சன் வந்து செல்லும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்குள் அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் உணர்ச்சிவசப் படாதீர்கள். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் வரும். சந்தேகத்தால் குடும்பத் தில் குழப்பங்கள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். வணிகச் சங்கத்தில் உங்களுக்கென்று தனி இடம் – பதவி உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தப் புதிய வாய்ப்பு கிடைக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சுபச் செலவுகளைத் தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்

சென்னை – திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

%d bloggers like this: