குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்

மீனம்

டிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை லாப ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல தீர்வுகளைத் தரப்போகிறார். கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனில் பெரும் பகுதியை அடைப்பீர்கள்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் மனக் கசப்பு நீங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தடைப்பட்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தில் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்கள், அரசு விஷயங் களில் அலட்சியம் வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்; சொத்து சேரும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு நீங்கும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகளால் திணறுவீர்கள்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று அதிசாரமாகியும், வக்ரமாகியும் மறைவதால் அலைச்சலும், சுபச்செலவுகளும் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவர். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். உங்களைப் புரிந்துகொள்ளும் பங்குதாரர் அமைவார்.

உத்தியோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும்; வேலைப்பளு குறையும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்துச் சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

உங்களின் தொலை நோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். அதிகச் சம்பளத்துடன் வெளிநாட்டு வாய்ப்பும் வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்குச் சாதகமாக முடியும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதி மற்றும் சொத்து சேர்க்கையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்

பழநியில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியின் ராஜ அலங்காரத் திருக்கோலத்தை ஒருமுறை தரிசித்து வாருங்கள். முருகனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

%d bloggers like this: