குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்

மேஷம்

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குக் குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். `பத்தாம் இடமென்றால் பதவியை பறித்து விடுவாரே’ என்ற பயம் வேண்டாம்!

 

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

வேலையில் இடமாற்றம் உண்டாகும். யாருக் காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் முடித்து காட்டுவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்க ளையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. மனஇறுக்கம் உண்டாகும். தன்னம்பிக்கை யுடன் இருங்கள். முக்கிய கோப்புகள், காசோலை யைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களின் போக்கைக் கண்டுகொள்ள வேண்டாம். வீண்பழி வந்துசேரலாம். நகை, பணத்தை இழக்க நேரிடும். கவனம் தேவை.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில், கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கடனில் ஒருபகுதியை அடைக்க வழி பிறக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிக்கிறார். குழந்தை யில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்விகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிக வட்டிக் கடனை தீர்க்கப் புதுவழி பிறக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் வசதியுள்ள வீட்டிற்குக் குடி புகுவீர்கள். கலை, இசையில் நாட்டம் பிறக்கும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். நிம்மதியான தூக்கம் வரும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசி நாதானான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்கிறார். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். புதிதாக வீட்டு, மனை வாங்குவீர்கள்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 11-ல் அதிசாரமாகியும், வக்ரமாகியும் பயணிப்பதால், நீங்கள் வெளிச் சத்திற்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சகோதரிக்குத் தடைப்பட்டிருந்த திருமணம் சிறப்பாக முடியும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பழைய வாடிக்கை யாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிர்க்கவும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். கடினமாக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டி வரும். என்றாலும் அனைத்திலும் சாதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதாகவும் சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

திண்டிவனத்துக்கு அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் ஸ்ரீமுருகப்பெருமானை, சஷ்டி திதி நாளில் சென்று தீபமேற்றி வணங்கி வாருங்கள்; வாழ்வில் உயர்வு பெருவீர்கள்.

%d bloggers like this: