குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்

கடகம்

தொலைதூரச் சிந்தனையுடையவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடன் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர் களுக்கு திருமணம் கூடி வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலர், வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுப் பதவிக்கு உங்கள் பெயர் பரீசலிக்கப்படும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்துக்கு மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்னை களுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி யுண்டு. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் ராசி நாதனான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை அமையும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் வருங்காலத் திற்காகச் சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்சனை சுமுகமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1- ம் பாதத்தில் குருபகவான் செல்வதால், யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை 8-ம் வீட்டிற்கு குரு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் பணம் வரும். ஆனால் சேமிக்க முடியாது. வீண் செலவு கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் சூட்சுமங்களையும், ரகசியங் களையும் அறிந்து அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். நல்ல பங்குதாரர் கிடைப்பார். புரோக்கரேஜ், ஏற்றுமதி – இறக்குமதி, கட்டுமானம், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகிக் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வளமைப்படுத்துவதுடன் வருங்காலத் திட்டங் களுக்கு வித்திடுவதாக அமையும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் திருத்தணிக்குச் சென்று, தணிகை முருகனுக்குத் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வாருங்கள். தடைகள் அனைத்தும் விலகும்; விருப்பங்கள் நிறைவேறும்.

%d bloggers like this: