குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்

ரிஷபம்

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவ தால், புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதை கிடைக் கும். எதிர்பார்த்த பணம், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களைகட்டும். கல்வியாளர், அறிஞர் களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், கவலைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதிலிருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு, மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காய்ச்சல், சளித்தொந்தரவு, விரக்தி, ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஆடை ஆபரணங்கள் சேரும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், செலவுகளும் வந்துபோகும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேற்று மொழியினர் உதவுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வீட்டுக் கடன் கிடைக்கும்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிற்கு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால், அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழி வந்து செல்லும். சொத்துகள் வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், உணவு, ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றிக் குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வசதி- வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்

சென்னை – திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் கொண்டைக் கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் தடைகள் நீங்கும்; வெற்றி கிடைக்கும்.

%d bloggers like this: