குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்

மிதுனம்

திலும் புதுமையைப் புகுத்துவதில் வல்லவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும் தருவார்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். ஈகோ பிரச்னையால் கணவன் – மனைவிக்குள் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலைச் சுமை, கனவுத் தொல்லை வாட்டும். சொத்து வரியைச் செலுத்திச் சரியாகப் பராமரியுங்கள். வெளியூர் சென்றால் நகை-பணத்தைப் பத்திரப் படுத்திவிட்டுச் செல்லுங்கள். திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் இருக்கும்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குரு 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டுப் ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்விகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத் தைப் பார்ப்பதால், தாய்வழிச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்குத் திருமணம் கூடி வரும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக் கும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். திருமணம் கூடி வரும்.

5.03.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் சஷ்டம- லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத் திரத்தில் குரு செல்வதால், சகோதர வகையிலும், வீடு சொத்து பராமரிப்பு வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். புறநகரில் வீட்டு மனை அமையும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் சோர்வு வந்து செல்லும். பூர்விகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும்.

கும்பத்தில் குருபகவான் : குரு பகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அதிசாரமாகவும், வக்ரமாகியும் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். நின்றுபோன வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். வெற்றி, குழந்தைப் பாக்கியம், புது வேலையில் அமர்தல் என யாவும் உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு நட்டங்கள் வந்து போகும். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கோபம், அலட்சியம் வேண்டாம். உயரதிகாரிகள் உங்களின் தவறுக ளைச் சுட்டிக் காட்டினால், ஏற்றுக் கொள் ளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, அதீத உழைப்பால் புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆதிநாதன், ஸ்ரீஆதிநாத நாயகியைச் சனிக்கிழமைகளில் சென்று, மலர் மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; மகிழ்ச்சி தொடங்கும்.

%d bloggers like this: