குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்

சிம்மம்

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் சலனப்படாதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே சங்கடங்களைத் தருவாரே என்று கலங்காதீர்கள். ஒரளவு நல்லதே நடக்கும். வாழ்வின் சூட்சுமங் களைக் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேற பாருங்கள்.

குருப்பெயர்ச்சி  ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

செலவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளா தீர்கள். சிலர் உங்களைத் தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்; கவனம் தேவை. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். `எல்லா இடங்களிலும் நான்தான் விட்டுக் கொடுத்துப் போகவேண்டுமா’ என்ற ஆதங்கம் எழும். முன்கோபத்தைத் தவிருங்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி, காய் நகர்த்துவீர்கள். பழைய நகையை மாற்றிப் புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும்.

குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்கள் புத்துணர்ச்சி தரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் விரய ஸ்தானதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், அடிக்கடி பதற்றப் படுவீர்கள். அடுத்தவர்களைச் சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குருபகவான் செல்வதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

கும்பத்தில் குருபகவான்: குரு 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிற்கு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் உங்களுக்கு யோகபலன்களை அள்ளித்தருவார். பசியின்மை, சோர்வு, முன்கோபம் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சொத்து வாங்கு வீர்கள். சகோதரருக்குத் திருமணம் ஏற்பாடாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிக்கு இருந்த கர்ப்பப்பைக் கோளாறு நீங்கும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்களை எதிர்பார்க் காமல் சில பணிகளை முடிப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள்.

புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் அடைவீர்கள். சொந்த இடத்துக்கு நகரும் முடிவுக்கு வருவீர்கள். சிமென்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர்பிரைசஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைத்தாலும் பலனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். உயரதிகாரி களுக்குத் தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத செலவுகள், அலைச்சல்களோடு குறிப்பிடத் தகுந்த வெற்றிகளை அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபசுபதீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

%d bloggers like this: