தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

 

தட்சிணா மூர்த்தி வேறு. குருபகவான் வேறு. இருவரும் ஒருவர் அல்ல! ஆனால் நிறைய பேர் இருவரும் ஒருவர்தான் என்று நினைத்து வழிப்பட்டு பரிகாரங்களை செய்து வருகிறார்கள்.

நிஜத்தில் தட்சிணா மூர்த்தி மற்றும் குரு பகவானுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

1. தட்சிணாூர்த்தி என்பவர் சிவ வடிவம். குருபகவான் கிரக வடிவம்.

2. தட்சிணாூர்த்தி சிவன் அதாவது முதலாளி, குருபகவான் பிரகஸ்பதி அதாவது அதிகாரி.

3. தட்சிணமூர்த்தி சிவகுரு. குருபகவான் தேவகுரு.

4. தக்ஷிணாமூர்த்தி என்பவர் கல்லாலின் கீழ் அமைந்து நான்மறைகளை ஆறு அங்கங்களோடு சனகர், சானதனர்,சனந்தனர்,சனர்குமாரர் என்ற நான்கு பிரம்ம ரிஷிகளுக்கு போதிப்பவர்.

5. குருபகவான் என்பவர் நவ கோள்களில் வியாழன் ஆக இருந்து அனைத்து உயிர்களுக்கும் முற்பிறவியில் செய்த வினைகளை காலமறிந்து இடமறிந்து கொண்டு சேர்பவர்.

6. தக்ஷிணாமூர்த்தி என்பவர் 64 சிவ வடிவங்களில் ஒருவராக திகழ்கிறார். குருபகவான் நவ கோள்களில் 5 ஆவது இடத்தில் அங்கம் வகிப்பவர்.

7. தக்ஷிணாமூர்த்தி தோன்றுதல், மறைவது என எதுவும் கிடையாது.

குருவோ உதயம் அஸ்தமனம் என்ற தன்மை கொண்டவர்.

இவ்வளவு வேற்றுமைகள் இருவரிடம் உள்ளது. அதை பற்றி தெரியாமல் இருவரும் ஒருவர் தான் என வணங்கி வருகிறோம்.

தட்சிணாமூர்த்தியை சிவ வடிவமாக நினைத்து வழிபடுங்கள்.

இதை பற்றி தெரியாமல் கோவிலில் தட்சிணாமூர்த்தியை குருபகவான் போல மாற்றி விடுகிறார்கள். அனைத்து பரிகார பூஜைகள் செய்கிறார்கள்.

குருவுக்கு அணிவிக்க கூடிய மஞ்சள் நிற துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவித்து விடுகிறார்கள். கடலை போன்ற நெய்வேத்தியத்தை அவருக்கு படைக்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். பலரும் இருவரும் ஒருவர் தான் என வாதடுகின்றனர்.

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தான். ஆனால் தக்ஷிணாமூர்த்தி என்பவர் குருவுக்கு குருவான பெரிய கடவுள். அதனால் குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் என தவறு என்று கூறுவதும் தவறுதான். அதுபோல குருவின் அதிதேவதை தக்ஷிணாமூர்த்தி என்றும் கூறுகிறார்கள். குருவுக்கு அதிதேவதை இந்திரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் தொன்னுல்களில் உள்ளன. எனவே குழப்பத்தை கைவிடுங்கள்.

எனவே நீங்கள் ஞானம்‌ பெற வேண்டும் என்று விரும்பினால் சிவ வடிவமான தென்னவன் தக்ஷிணாமூர்த்தி கடவுளை வழிபடுங்கள்.

ஜாதகத்தில் குரு தோஷம், குரு பலன் பெற என குரு கிரக பிரீத்தி செய்ய வேண்டுமெனில் நவ கோள்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுங்கள்.

இந்த கருத்தில் எந்தவித ஐயம் இன்றி வழிபடுங்கள்.

%d bloggers like this: