2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

இந்தியாவில் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகின்றது. இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் எங்கே போனாலும் ஆதார் கார்டு தான் முதலில் கேட்கிறார்கள். அதனால் உங்கள் மொபைலில் மின்னணு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

1. முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு உள் நுழையவும்.

2. உங்கள் ஆதார் அட்டையின் மின்னணு நகலைப் பதிவிறக்க பின்வரும் நடைமுறைகளை பெறுவீர்கள்:

3. அதில் உங்கள் ஆதார் எண் 12 இலக்க எண்ணை டைப் செய்யவும்.

4. அங்கு உள்ள CAPTCHA என்னை சரியாக பார்த்து டைப் செய்யவும்.

5. அங்கு Enter OTP என்ற பட்டன் இருக்கும்.அதை அழுத்தினால் உங்கள் ஆதார் எண்ணுடன் எந்த Mobile Number இணைக்கப்பட்டுள்ளதோ அதற்கு 6 இலக்க எண் வரும்.

6. அப்பொழுது இரண்டு கேள்விகள் வரும்.அது Take Survey அதற்கு விடை அளிக்கவும்.

7. உங்களது மின்னணு ஆதார் அட்டை டவுன்லோட் ஆகி விடும்.

%d bloggers like this: