Daily Archives: ஒக்ரோபர் 25th, 2020

ராங்கால் நக்கீரன் 23-10-20

ராங்கால் நக்கீரன் 23-10-20

Continue reading →

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரேநாள் ஒரே வேளையில் உடலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்

2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன்

3. தேன் ஒரு ஸ்பூன்.

Continue reading →

அ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20

அ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20

Continue reading →

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

 

கே.பி.வித்யாதரன்

குருப்பெயர்ச்சிகுருப்பெயர்ச்சி

மண் வளம்… மருத்துவம்… பொருளாதார நிலை எப்படி?

பிரீமியம் ஸ்டோரி

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 அன்று சுக்லபட்ச பிரதமை திதி, சம நோக்குள்ள அனுஷம் நட்சத்திரம்… சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் மறைந்த மந்த யோக நாளில்… சரத் ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சிகளில் கோழி ஊன் தொழில் புரியும் வேளையில், தட்சிணா யனப் புண்ய காலத்தில், இரவு 9 மணி 34 நிமிடத்தில், மிதுன லக்னத்தில் – நவாம்சச் சக்கரத்தில் கும்ப லக்னத்தில், பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.

இறுதி மூச்சுவரை நெஞ்சுறுதியுடன் உண்மையையே பேசி உலகத்தாரை வியக்க வைத்த ஹரிச்சந்திர மகா சக்கரவர்த்தியின் நாவிலும், பசுவின் கண்ணீர் துடைக்க தன் மகனையே கொல்லத் துணிந்த மனுநீதிச் சோழனின் மனத்திலும் நின்று அவர்களை அறம் செய்ய பணித்தது இந்தக் குரு பகவான்தான்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

நிதி ஆளுமையில் நேர்மை, ஞானம் அருள்வதில் வள்ளல் தன்மை, தேசப் பற்று, அதற்காக தன்னையே இழக்கத் துணியும் நெஞ்சுரம், வேத வித்வான்களிடம் நிறைந் திருக்கும் வித்யை ஆகிய அனைத்துக்கும் காரணம் குருபகவானின் திருவருளே.

இத்தகு மகிமைகளைக் கொண்ட குரு பகவான், இப்போது பெயர்ச்சியாகி சனி பகவானுடன் சென்று சேர்கிறார். சனி பகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்தில் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழைமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும், வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறைக் கல்வி வழக்கத்திற்கு வரும்.

ராணுவம், காவல்துறை பலப்படுத்தப்படும். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்குப் புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலெக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும்.

பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான், சுருக்கி சுண்டவைக்கும் கிரகமான சனி பகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப் பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமைக்குத் தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும்.

நிலக்கரி, தங்கச் சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் ஆகியவை செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் மற்றும் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர் கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பர்யத் தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து, இயல்பாகவும் இயற்கையுடன் இணைந்து வாழ வழி வகுக்கும்.

மேஷம்

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குக் குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். `பத்தாம் இடமென்றால் பதவியை பறித்து விடுவாரே’ என்ற பயம் வேண்டாம்!

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

வேலையில் இடமாற்றம் உண்டாகும். யாருக் காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் முடித்து காட்டுவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்க ளையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. மனஇறுக்கம் உண்டாகும். தன்னம்பிக்கை யுடன் இருங்கள். முக்கிய கோப்புகள், காசோலை யைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களின் போக்கைக் கண்டுகொள்ள வேண்டாம். வீண்பழி வந்துசேரலாம். நகை, பணத்தை இழக்க நேரிடும். கவனம் தேவை.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில், கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கடனில் ஒருபகுதியை அடைக்க வழி பிறக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிக்கிறார். குழந்தை யில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்விகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிக வட்டிக் கடனை தீர்க்கப் புதுவழி பிறக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் வசதியுள்ள வீட்டிற்குக் குடி புகுவீர்கள். கலை, இசையில் நாட்டம் பிறக்கும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். நிம்மதியான தூக்கம் வரும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசி நாதானான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்கிறார். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். புதிதாக வீட்டு, மனை வாங்குவீர்கள்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 11-ல் அதிசாரமாகியும், வக்ரமாகியும் பயணிப்பதால், நீங்கள் வெளிச் சத்திற்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சகோதரிக்குத் தடைப்பட்டிருந்த திருமணம் சிறப்பாக முடியும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பழைய வாடிக்கை யாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிர்க்கவும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். கடினமாக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டி வரும். என்றாலும் அனைத்திலும் சாதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதாகவும் சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

திண்டிவனத்துக்கு அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் ஸ்ரீமுருகப்பெருமானை, சஷ்டி திதி நாளில் சென்று தீபமேற்றி வணங்கி வாருங்கள்; வாழ்வில் உயர்வு பெருவீர்கள்.

ரிஷபம்

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவ தால், புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதை கிடைக் கும். எதிர்பார்த்த பணம், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களைகட்டும். கல்வியாளர், அறிஞர் களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், கவலைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதிலிருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு, மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காய்ச்சல், சளித்தொந்தரவு, விரக்தி, ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஆடை ஆபரணங்கள் சேரும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், செலவுகளும் வந்துபோகும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேற்று மொழியினர் உதவுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வீட்டுக் கடன் கிடைக்கும்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிற்கு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால், அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழி வந்து செல்லும். சொத்துகள் வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், உணவு, ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றிக் குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வசதி- வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்

சென்னை – திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் கொண்டைக் கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் தடைகள் நீங்கும்; வெற்றி கிடைக்கும்.

மிதுனம்

திலும் புதுமையைப் புகுத்துவதில் வல்லவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும் தருவார்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். ஈகோ பிரச்னையால் கணவன் – மனைவிக்குள் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலைச் சுமை, கனவுத் தொல்லை வாட்டும். சொத்து வரியைச் செலுத்திச் சரியாகப் பராமரியுங்கள். வெளியூர் சென்றால் நகை-பணத்தைப் பத்திரப் படுத்திவிட்டுச் செல்லுங்கள். திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் இருக்கும்.

குரு பகவானின் பார்வைப் பலன்கள்: குரு 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டுப் ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்விகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத் தைப் பார்ப்பதால், தாய்வழிச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்குத் திருமணம் கூடி வரும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக் கும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். திருமணம் கூடி வரும்.

5.03.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் சஷ்டம- லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத் திரத்தில் குரு செல்வதால், சகோதர வகையிலும், வீடு சொத்து பராமரிப்பு வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். புறநகரில் வீட்டு மனை அமையும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் சோர்வு வந்து செல்லும். பூர்விகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும்.

கும்பத்தில் குருபகவான் : குரு பகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அதிசாரமாகவும், வக்ரமாகியும் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். நின்றுபோன வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். வெற்றி, குழந்தைப் பாக்கியம், புது வேலையில் அமர்தல் என யாவும் உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு நட்டங்கள் வந்து போகும். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கோபம், அலட்சியம் வேண்டாம். உயரதிகாரிகள் உங்களின் தவறுக ளைச் சுட்டிக் காட்டினால், ஏற்றுக் கொள் ளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, அதீத உழைப்பால் புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆதிநாதன், ஸ்ரீஆதிநாத நாயகியைச் சனிக்கிழமைகளில் சென்று, மலர் மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; மகிழ்ச்சி தொடங்கும்.

கடகம்

தொலைதூரச் சிந்தனையுடையவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடன் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர் களுக்கு திருமணம் கூடி வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலர், வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுப் பதவிக்கு உங்கள் பெயர் பரீசலிக்கப்படும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்துக்கு மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்னை களுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி யுண்டு. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் ராசி நாதனான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை அமையும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் வருங்காலத் திற்காகச் சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்சனை சுமுகமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1- ம் பாதத்தில் குருபகவான் செல்வதால், யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை 8-ம் வீட்டிற்கு குரு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் பணம் வரும். ஆனால் சேமிக்க முடியாது. வீண் செலவு கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் சூட்சுமங்களையும், ரகசியங் களையும் அறிந்து அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். நல்ல பங்குதாரர் கிடைப்பார். புரோக்கரேஜ், ஏற்றுமதி – இறக்குமதி, கட்டுமானம், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகிக் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வளமைப்படுத்துவதுடன் வருங்காலத் திட்டங் களுக்கு வித்திடுவதாக அமையும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் திருத்தணிக்குச் சென்று, தணிகை முருகனுக்குத் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வாருங்கள். தடைகள் அனைத்தும் விலகும்; விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம்

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் சலனப்படாதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே சங்கடங்களைத் தருவாரே என்று கலங்காதீர்கள். ஒரளவு நல்லதே நடக்கும். வாழ்வின் சூட்சுமங் களைக் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேற பாருங்கள்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

செலவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளா தீர்கள். சிலர் உங்களைத் தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்; கவனம் தேவை. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். `எல்லா இடங்களிலும் நான்தான் விட்டுக் கொடுத்துப் போகவேண்டுமா’ என்ற ஆதங்கம் எழும். முன்கோபத்தைத் தவிருங்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி, காய் நகர்த்துவீர்கள். பழைய நகையை மாற்றிப் புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும்.

குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்கள் புத்துணர்ச்சி தரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் விரய ஸ்தானதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், அடிக்கடி பதற்றப் படுவீர்கள். அடுத்தவர்களைச் சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குருபகவான் செல்வதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

கும்பத்தில் குருபகவான்: குரு 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிற்கு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் உங்களுக்கு யோகபலன்களை அள்ளித்தருவார். பசியின்மை, சோர்வு, முன்கோபம் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சொத்து வாங்கு வீர்கள். சகோதரருக்குத் திருமணம் ஏற்பாடாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிக்கு இருந்த கர்ப்பப்பைக் கோளாறு நீங்கும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்களை எதிர்பார்க் காமல் சில பணிகளை முடிப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள்.

புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் அடைவீர்கள். சொந்த இடத்துக்கு நகரும் முடிவுக்கு வருவீர்கள். சிமென்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர்பிரைசஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைத்தாலும் பலனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். உயரதிகாரி களுக்குத் தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பாராத செலவுகள், அலைச்சல்களோடு குறிப்பிடத் தகுந்த வெற்றிகளை அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபசுபதீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

கன்னி

ல்லோரிடமும் சமமாகப் பழகும் அன்பர் நீங்கள். குரு 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணிக்க வைப்பார். வாழ்வில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணம் கோலாகலமாக நடக்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தின் பங்கு கைக்கு வரும். தாயாருடனான மோதல்கள் நீங்கும். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற வீண் பயம் விலகும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம், கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்களின் 9- ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். வருமானம் உயரும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஷேர் மூலமாகப் பணம் வரும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் விரயாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். நல்ல வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். உறவினர்களின் விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் லாபாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பண வரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் திருதிய அட்டமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பயணங்களால் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவு வந்து நீங்கும். புதுச் சொத்து வாங்குவீர்கள்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால், கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருக்கமான சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டி வரும்.

கும்பத்தில் குருபகவான்: குரு பகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் சென்று அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணருவீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத் தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசாங்க நெருக்கடிகள் நீங்கும். சிலர் சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில், தொந்தரவு தந்த மேலதிகாரி இடம் மாற்றம் பெறுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, தொட்ட காரியங்களைத் துலங்கவைப்பதுடன், திடீர் யோகங்களை அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது திருப்புலிவனம். இவ்வூரில் அருளும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணாமூர்த்தியை, சித்திரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்; வெற்றி உண்டு.

துலாம்

ழைய வாழ்வை என்றும் மறவாதவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

கணவன்-மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. முடிவுகள் எடுப்பதில் உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவேண்டாம். வீடு கட்ட அரசு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

தாயாருக்குச் சின்ன சின்ன அறுவை சிகிச்சை, வந்து போகும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். வாகனம் சார்ந்து சிறு அபராதம் கட்ட வாய்ப்பு உண்டு. பூர்விகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளியூர்ப் பயணங் களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சிலருக்குப் புது வேலை கிடைக்கும். குருபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் அதிகமாகும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் கரையும். மூத்த சகோதர வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். அரசு மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வீண்பழி விலகும். எங்கும் எதிலும் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்குத் திருமணம் முடியும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் தன மற்றும் சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் அலைச்சல் இருக்கும். புதுச் சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவில் கவனம் தெவை. எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகமாகும். வேற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

கும்பத்தில் குருபவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் அமர்வதால் இக்காலகட்டத்தில் கவலை நீங்கும். பணம் வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குத் திருமணம் கைகூடும்.

வியாபாரத்தில், மாறி வரும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் ஈட்ட பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசிந்துவிடாமல் காப்பது அவசியம். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். சிலர், நம்பிக்கையான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். அதனால் மன உளைச்சல் ஏற்படலாம். எனினும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங் களையும் தந்தாலும், கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரயும் அவர் கோயிலில் அருளும் ஸ்ரீதட்சிணா மூத்தியையும், புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தடைகள் நீங்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். வேலைகளில் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீண் கௌரவத்திற்காகச் சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் அளிக்கவேண்டாம்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

மற்றவர்களை நம்பிக் குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன் – மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பாமல் முக்கிய விஷயங்களை நீங்களே கவனிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.

குருபகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் உண்டு. கூடா பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைப் பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிறு விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்லவும்.

வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாள்களிடம் கண்டிப்பு வேண்டாம். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சிறு சிறு அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். பதவி உயர்வு கிடைக்கும். எனினும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். இடமாற்றம் சாதகமாகும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும், அவ்வப்போது வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

சஷ்டி திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியையும், ஸ்ரீவள்ளி – ஸ்ரீதெய்வானை அம்மையரையும் சென்று வணங்கி வழிபடுங்கள். கிரக தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் நிலைக்கும்.

தனுசு

நியாயத்துக்காகப் போராடும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

கூடாத பழக்கங்களைக் கொண்டவர்களைவிட்டு விலகுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையாருடன் மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியம் சீராகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால், கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8 -ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஆயுள் பலம் கூடும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் பாக்கியாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயமுண்டு.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ் கௌரவம் கூடும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வேற்று மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு.

கும்பத்தில் குருபவான்: குரு பகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை அதிசாரமாகியும், வக்ரமாகியும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால் ஆடம்பரச் செலவுகளைக் குறையுங்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். தாயாருடன் கருத்துமோதல்கள் வரும். வி.ஐ.பிகள் மூலம் சாதிப்பீர்கள்.

வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். முரண்டு பிடித்த வேலையாள்கள் இனி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். சொந்த இடத்திற்குச் சிலர் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரி களின் மனநிலைக்கு ஏற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி நீங்கள் தொட்டதையெல்லாம் துலங்க வைக்கும்; அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியையும், ஸ்ரீதெய்வானையையும், கிருத்திகை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். துன்பங்கள் நீங்கும்; நிம்மதி பெருகும்.

மகரம்

னைவரையும் சமமாக மதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ஜன்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப் பட்டு வாக்குறுதி தரவேண்டாம். வெளி உணவு களைத் தவிர்ப்பது நல்லது.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வீண் அவநம்பிக்கை வந்து போகும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன் – மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். சொந்தபந்தங்கள் உங்களின் தன்மானத்தைச் சீண்டும் விதம் நடந்துகொள்வார்கள். பிள்ளை களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். புதிய நபர் களை நம்புவது கூடாது. காசோலை விஷயத்தில் கவனம் தேவை.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டு. பரம்பரைச் சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர், பரம்பரைச் சொத்தில் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவார்கள். தியானம் மற்றும் பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கணவன் – மனைவிக்குள் பாசம் குறையாது.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர்ப் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். தொலை தூரப் பயணங்கள் உண்டு. வேற்று மதத்தினர், மொழியினர் உதவுவர். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு உடல்நிலை சீராகும். வசதியான வீட்டிற்கு இடமாறுவீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் சுக லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். புதுச் சொத்து அமையும். வி.ஐ.பிகள் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள். அயல் நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். புது மனை-வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வந்து செல்லும்.

கும்பத்தில் குருபவான்: குரு 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வ தால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரச்னை யால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் நல்ல விதத்தில் முடியும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். சின்னச் சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். புது முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். யாருக்கும் முன் பணம் தந்து ஏமாற வேண்டாம். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கூட்டுத் தொழில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், முறைப்படி ஒப்பந்தங்களைப் பதிவு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். வேலையில் நீடிப்போமோ, மாட்டோமோ என்ற சந்தேகம் தினமும் எழும். எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெறப் போராட வேண்டி இருக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி வேலைச் சுமையையும் எதிர்மறை எண்ணங்களையும் தருவதாக இருந்தாலும், எதிர்காலத்துக்கான பலமான அஸ்திரவாரத்தை இடவைப்பதாக அமையும்.

பரிகாரம்

திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருளும் ஸ்ரீஅக்னீஸ் வரரையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்; நல்லது நடக்கும்.

கும்பம்

டினமான உழைப்பாளி நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீட்டுப் ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு பிரச்னைகளைப் பெரிதுப்படுத்தவேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, கல்யாணம் குறித்து கவலைகள் வந்துபோகும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்துத் திருமணம் முடிப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பேச்சில் கவனம் தேவை; வீண் விமர்சனங்கள் எழும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள். சொத்து ஆவணங் களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். நல்ல வசதியான வீட்டுக்கு சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் சப்தமாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பாதிக்கும். அவர் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்க சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடும். ஆரோக்கி யத்திலும் அக்கறை தேவை. பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கு விஷயத்தில் குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். காப்பீடுகளைச் சரியாகப் புதுப்பிக்கவும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் தைரிய ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், இளைய சகோதர வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களில் சிலர் வேலை மாறவும் வாய்ப்பு உண்டு.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்சன் வந்து செல்லும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்குள் அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் உணர்ச்சிவசப் படாதீர்கள். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் வரும். சந்தேகத்தால் குடும்பத் தில் குழப்பங்கள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். வணிகச் சங்கத்தில் உங்களுக்கென்று தனி இடம் – பதவி உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தப் புதிய வாய்ப்பு கிடைக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சுபச் செலவுகளைத் தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்

சென்னை – திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீனம்

டிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை லாப ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல தீர்வுகளைத் தரப்போகிறார். கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனில் பெரும் பகுதியை அடைப்பீர்கள்.

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்... துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்

பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் மனக் கசப்பு நீங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தடைப்பட்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தில் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்கள், அரசு விஷயங் களில் அலட்சியம் வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்; சொத்து சேரும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு நீங்கும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகளால் திணறுவீர்கள்.

கும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று அதிசாரமாகியும், வக்ரமாகியும் மறைவதால் அலைச்சலும், சுபச்செலவுகளும் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவர். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். உங்களைப் புரிந்துகொள்ளும் பங்குதாரர் அமைவார்.

உத்தியோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும்; வேலைப்பளு குறையும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்துச் சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

உங்களின் தொலை நோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். அதிகச் சம்பளத்துடன் வெளிநாட்டு வாய்ப்பும் வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்குச் சாதகமாக முடியும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதி மற்றும் சொத்து சேர்க்கையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்

பழநியில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியின் ராஜ அலங்காரத் திருக்கோலத்தை ஒருமுறை தரிசித்து வாருங்கள். முருகனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.