நீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா..? நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..

முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. முட்டையில் பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது என்பன போன்ற விஷயங்கள் பலருக்கும் தெரியும். எனவேதான் மக்கள் முட்டையையும் தினசரி உணவுத் தேவையுடன் வாங்கி சமைத்து உண்கின்றனர். இப்படி நம்பிக்கையுடன் வாங்கும் அந்த முட்டைகள் தரமானதுதானா என என்றைக்காவது

யோசித்திருக்கிறீர்களா..? அதற்கான பதில்தான் இந்தக் கட்டுரை.

பொதுவாக முட்டை நல்ல முட்டையாக இருக்கிறதா என்பதை உடைத்துப் பார்த்தோ அல்லது வேக வைத்தப் பின்னர்தான் கண்டறிய முடியும்.

ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் வாங்கும் போதே கண்டறிய MyGovIndia என்கிற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நமக்கான சில டிப்ஸுகளை பகிர்ந்துள்ளது.

அதாவது முட்டை வாங்கி வந்ததும் அந்த முட்டை தரமானதுதானா என கண்டறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

அந்த தண்ணீருக்குள் முட்டையை மூழ்க வைக்க உள்ளே போடுங்கள்.

பின் முட்டை தரமானது, கெட்டுப்போகவில்லை, ஃபிரெஷ் முட்டை எனில் அது கிண்ணத்தின் அடியில் போய் தங்கிவிடும். அதுவும் படுத்த நிலையில் இருக்க வேண்டும்.

சற்று பழைய முட்டை எனில் கிண்ணத்தின் அடியில் ஒரு ஓரமாக தேங்கி செங்குத்தான நிலையில் நிற்கும்.

முட்டை முற்றிலும் கெட்டுப்போய்விட்டது எனில் அது தண்ணீருக்கு மேல் பந்துபோல் மிதக்கும். ஏனெனில் முட்டையின் அழுகிய நிலையில் இருக்கும்போது, அதற்குள் இருக்கும் காற்றுப்பை பெரிதாக வளர்கிறது. முட்டையிலிருந்து நீர் வெளியேறி காற்றால் நிரம்புகிறது. அதனால்தான் அழுகிய முட்டை தண்ணீரில் மிதக்கிறது.

அவ்வாறு மிதந்த அழுகிய முட்டையை கடையில் கொடுத்து மாற்றிவிடுங்கள் அல்லது குப்பையில் எரிந்துவிடுங்கள். அழுகிய முட்டையை சாப்பிடும்போது அது ஃபுட் பாய்சனாக மாறும் ஆபத்து உள்ளது. எனவே முட்டை வாங்கினால் இப்படி பரிசோதனை செய்துவிட்டுப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும் முட்டையை இப்படி பரிசோதனை செய்துவிட்டு சமைத்துக் கொடுங்கள்.

%d bloggers like this: