ரொம்ப.. ரொம்ப ஆபத்து… சாதாரணமா நினைக்காதீங்க… இனி அதிகம் குடிக்காதீங்க..!!

குளிர்பானங்களில் உயிரைப் பறிக்கும் நோய்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

கட்டாயம் உணவு முறையில் மாற்றம் தேவை என்பதை இந்த கொரோனா நமக்கு நன்கு தெரியப்படுத்திவிட்டது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவை அதிகம்

உண்ணவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பாரம்பரிய உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டு வந்தனர். இது ஒருபுறம் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், துரித உணவை விட குளிர்பானங்கள் என்று அழைக்கப்படும் இனிப்பு பானங்கள் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

இனிப்பு பானங்கள் மற்றும் அதை சார்ந்த உணவுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் உடல் நலத்திற்கு கேடு என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது.

இனிப்பு பானங்கள் குடிப்பதால் பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய் அல்லது நீரிழிவு நோய் உள்ளிட்ட உயிரை பறிக்கக்கூடிய நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு அபாயங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவர்கள் அருந்தும் உணவுப் பொருட்கள் தரமானதுதானா ? என்பதை யோசித்து உட்கொண்டால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

%d bloggers like this: