இன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..!!!

சாணக்கியரின் பல நீதிகள் இன்றும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளன. இதனை கடைபிடித்தால், வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை எளிதாக கையாளலாம்.

அரசியல் பொருளாதார வல்லுநர் சாணக்யர்

அரசியல் பொருளாதார வல்லுநர் சாணக்யர்
சாணக்யர் ஒரு திறமையான அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர். பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த அறிவின் காரணமாக அவர் கவுடில்யா என்றும் அழைக்கப்பட்டார். சாணக்யர் தனது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை தனது நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்யர் கூறிய நீதியின் சாரத்தை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம், ஒரு நபர் தனது வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை எளிதில் சமாளித்து வெற்றிபெற முடியும்.
கல்வி தான் மிகப்பெரிய செல்வம்

கல்வி தான் மிகப்பெரிய செல்வம் என சாணக்யர் கூறுகிறார். அதனால் அனைவரும் கற்க வேண்டியது அவசியம் என்கிறார். ஏனெனில் இது உங்களை கடினமான சூழ்நிலைகளில் இருந்து எளிதாக காப்பாற்ற முடியும். எல்லோரும் படித்த மற்றும் அறிவுள்ள நபர்களுக்கு சிறந்த மதிப்பு கொடுப்பார்கள். எனவே அறிவு செல்வம் இருப்பது அவசியம்.

பொறுமையும் தைரியமும் அவசியம்

பொறுமையும் தைரியமும் மிக மோசமான நெருக்கடிகளை கடக்க உதவும் இரண்டு தன்மைகள். இந்த இரண்டு குணமும் கடினமான சூழ்நிலைகளில் இருந்தும் நெருக்கடி காலங்களிலும் உங்களால் மிக எளிதாக சமாளிக்க முடியும். ஒருவர் எப்போதும் மோசமான காலங்களில் பொறுமையாக இருக்க வேண்டும், நெருக்கடி காலங்களில் பயமின்றி தைரியத்துடன் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நபர் வெற்றியை அடைய முடியும். நெருக்கடிக்கு பயந்தவர்களால் ஒருபோதும் முன்னேற முடியாது.

சேமிப்பு மிகவும் அவசியம்

நாம் ஈட்டும் பணத்தில் ஓரளவு சேமிப்பது முக்கியம். ஏனெனில் உங்களது நெருக்கடி நேரத்தில், நீங்கள் சேமித்த பணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணத்திற்காக நீங்கள்யார் முன்னும் கை ஏந்தும் நிலை ஏற்படாது. தானம் செய்வதும் என்பது எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் ஒரு விஷயம். எனவே ஒருவர் தானம் செய்ய தயங்க கூடாது.

முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் நம்பிக்கை

முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டும் கடினமான சூழ்நிலைகளை திறமையாக கையாண்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேற உங்களுக்கு உதவுகின்றன. சரியான முடிவை எடுக்க, உங்களிடம் நம்பிக்கை  இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் முன்னேற தன்னம்பிக்கை உதவுகிறது.

%d bloggers like this: