மலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்!’

உடலில் குறிப்பிட்ட வகை நோய் எதிர்ப்பணுக்கள் உள்ளனவா என்று சோதிக்க மிகவும் விலை உயர்ந்த கருவிகள் தேவை. ஆனால், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள், ‘கிராபீன்’ எனும் விந்தைப் பொருளைப் பயன்படுத்தி ஒரு சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர். இது, 100 மடங்கு குறைவான செலவில் எதிர்ப்பணுக்களை சோதித்து அறிய உதவுகிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கிராபீன் கருவியை, சிறுநீரக சிகிச்சைக்காக உருவாக்கினாலும், அதை, ‘கோவிட் – 19’ நோயாளிகளின் எதிர்ப்பணுக்களை அறியவும் உதவக்கூடும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சிறுநீரக மருத்துவர், தன் அறையிலேயே இந்த சோதனையை செய்து, நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனை கண்டுபிடித்துவிட முடியும். இதற்காக, அருகாமையில் உள்ள விலை உயர்ந்த கருவிகள் கொண்ட ஆய்வகத்தை தேடி அலையத் தேவையில்லை. இங்கிலாந்தில், இத்தகைய சோதனையை செய்யும் திறன்கொண்ட பெரிய கருவியின் விலை 48 லட்சம் ரூபாய்.
இந்த கருவியை கொண்டு செய்யும் சோதனைக்கு பதிலாக, மான்செஸ்டர் விஞ்ஞானிகளின் கருவியில் செய்தால், பல்லாயிரம் ரூபாய்கள் நோயாளிக்கு மிச்சமாகும்!

%d bloggers like this: