புதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா!

ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம்.

இந்தியனின் அடையாளம் ஆதார்:

நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

PVC ஆதார்:

இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

பிவிசி ஆதார் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி:

  • முதலில் http://uidai.gov.in/ எனும் வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அதன்பின் “Order PVC Card” எனும் லிங்கை க்ளிக் செய்து, உள்ளே செல்லவும்.
  • உங்களின் ஆதார் அட்டையை ஆர்டர் செய்ய, உங்கள் ஆதார் எண் அல்லது EID நம்பர் அல்லது Virtual Identification Number-ஐ என்டர் செய்யவும்.
  • பதிவு செய்தபின் “send OTP”-ஐ க்ளிக் செய்யவும்.
  • நேர அடிப்படையிலான-ஒரு-நேர-கடவுச்சொல் (Time Based One Time password (TOTP) ஐ m-ஆதார் செயலி வழியாகவும் உபயோகிக்கலாம்.
  • OTP-ஐ பதிவு செய்த பின், நீங்கள் அதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்பின் உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் பிரிண்ட் செய்து, பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய வகையான PVC ஆதார் அட்டையை தற்பொழுது பலரும் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: