கற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்!!!

சோற்றுகற்றாழையின் நன்மைகள் பற்றி நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய செடி இது. இச்செடி மருத்துவ ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டுள்ளது. கற்றாழையை வீட்டில் வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது ஆன்மீகத்தில் உள்ள நம்பிக்கை. இவ்வளவு நன்மைகள் கொண்ட கற்றாழை தவறான முறையில் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக கற்றாழை செடியை வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்க்கலாம். பெரும்பாலும் முட்செடிகளை வீட்டிற்குள் வளர்க்கக் கூடாது என சொல்வார்கள். ஆனால் கற்றாழை இதற்கு ஒரு விதிவிலக்கு.

கற்றாழையை காம்பவுண்ட் சுவர்கள் மீது வளர்த்து வர விஷ ஜந்துக்கள் உள்ளே நுழையாது. மேலும் எதிர்மறையான எண்ணங்களை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

இத்தகைய கற்றாழையை பொறுத்தவரை நாம் செய்யவே கூடாத இரண்டு தவறுகள் உள்ளன. பிஞ்சு கற்றாழையை ஒரு போதும் தவறிகூட பயன்படுத்தி விடாதீர்கள். கற்றாழையை பறிக்கும் போது நன்றாக முற்றியுள்ள இலையாக பார்த்து பறிக்க வேண்டும். பிஞ்சு கற்றாழையில் உள்ள அதிகப்படியான கசப்பு தன்மை எதிர்விளைவை ஏற்படுத்தி விடும். அதனை வெளிபுறத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, உள்ளுக்குள் எடுத்து கொள்வதாக இருந்தாலும் சரி பிஞ்சு கற்றாழை எப்போதும் ஆபத்தானது தான்.

இரண்டாவதாக நாம் செய்யும் தவறு கற்றாழையை பறித்தவுடன் உடனடியாக அதனை பயன்படுத்தி விடுவது. இவ்வாறு செய்தல் கூடாது. கற்றாழையை பறித்த பின் சிறிது நேரம் அதனை அப்படியே வைத்து விட வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் போது அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று வெளியேறும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக கழுவி விட வேண்டும். அதே போல் கற்றாழையை பயன்படுத்தும் முன்பாக குறைந்தது ஏழு முதல் எட்டு முறையாவது கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து சாப்பிடலாம். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும். உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி உடலை உள்ளிருந்து சுத்தமாக்கும். மேலும் இதய குழாயில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்கிறது.

கற்றாழையை ஒரு அழகு சாதன பொருளாக பயன்படுத்தும் போது அதனை முகத்தில் தடவி காய வைத்தால் ஜொலிக்கும் சருமத்தை பெறலாம். இதனை கூந்தலுக்கு பயன்படுத்தி வர பட்டு போன்ற மென்மையான கூந்தல் கிடைக்கும். கற்றாழை கலந்த நீரை வீடு முழுவதும் தினமும் தெளித்து வர வீட்டில் லஷ்மி கடாக்ஷம் பெருகும். இத்தனை நன்மைகள் வாய்ந்த கற்றாழை செடி ஒரு வேலை உங்கள் வீட்டில் இல்லை என்றால் இன்றே வாங்கி விடுங்கள்.

%d bloggers like this: