வாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்!

தற்போது மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் பெரும்பாலும் அனைவருக்குமே வாயுப் பிரச்சனை உருவாகிறது. இதற்கு அடிப்படை காரணம் செரிமான மண்டலத்தில் அதிகம் வாயு இருப்பதால்தான்.
இதனை தவிர்க்க உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும்

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் ஓமத்தை நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து குடித்து வர வாயு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாவதை தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து சீரகத் தண்ணீரை குடித்தாலும் வாயு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். சீரகத் தண்ணீர் செரிமான பிரச்சனைகளை சீராக்கி உடல் ஆரோக்கியமாக இருக்கவும் வழி செய்கிறது.
ஒரு ஸ்பூன் பெருங்காயத் தூளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலும் உடலில் சேர்ந்த வாயு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இஞ்சியை தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டி எடுத்து சிறிதளவு நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதனை தினமும் குடித்து வருவதால் உடலில் வாயு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

திரிபலா பொடியை சிறிது நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு அந்தத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் வாயு பிரச்சனைகள் ஏற்படாது. இதில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலே வாயு சம்பந்தமான பிரச்சினைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

%d bloggers like this: