100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சைவ உணவுகள் பொதுவாக ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்றில் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சைவ உணவைப்

பின்பற்றும்போது, உடலுக்குத் தேவையான கால்சியம், பி 12 வைட்டமின், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் என்பதால் இறைச்சியற்ற உணவைப் பின்பற்றுபவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பி.எம்.சி (BIOMED CENTRAL) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சைவ உணவைப் பின்பற்றுபவர்கள், வீகன்ஸ் மற்றும் பிற இறைச்சி உணவுகளைத் தவிர்த்து மீன் மட்டும் சாப்பிடுபவர்கள் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் புரதங்களைப் பெறுவதில்லை. மேலும், இறைச்சி சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ உணவு சாப்பிடுபவர்கள் எலும்பு முறிவுகளுக்கு 43% அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் இடுப்பு, கால்கள் மற்றும் முதுகெலும்புகளின் முறிவுக்கான அதிக வாய்ப்பைப் பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதாரத் துறையின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் டம்மி டோங் மற்றும் முன்னணி எழுத்தாளர் கூறுகையில், சைவ உணவு உண்பவர்கள் மொத்த எலும்பு முறிவுகளுக்கு அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் விளைவாக 10 ஆண்டுகளில் இறைச்சி சாப்பிட்ட 1,000 பேரில் 20க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு பாதிப்புகள் ஏற்பட்டன. அதுவே சைவ உணவு உண்பவர்களில் அபாயங்கள் இறைச்சி சாப்பிட்டவர்களை விட 2.3 மடங்கு அதிகமாக உள்ளன. இது 10 ஆண்டுகளில் 1,000 பேருக்கு 15 பேர் என்ற கணக்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய EPIC- ஆக்ஸ்போர்டு ஆய்வில் கிட்டத்தட்ட 55,000 பேரிடமிருந்து தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவர்கள் 1993 மற்றும் 2001 க்கு இடையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் பலர் இறைச்சி சாப்பிடுவதில்லை. எலும்பு முறிவு ஆபத்து உள்ளிட்ட சில விளைவுகளை உணவு போன்ற சில காரணிகள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் கண்காணிக்கப்பட்டனர்.

தற்போதைய ஆய்வில் பங்கேற்ற 54,898 பேரில், 29,380 பேர் இறைச்சி சாப்பிட்டனர். 8,037 பேர் மீன் சாப்பிட்டார்கள். ஆனால் இறைச்சி அல்ல. 15,499 பேர் சைவ உணவு உண்பவர்கள். 1,982 பேர் வீகன்ஸ் ஆவர். ஆரம்பத்தில், அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆட்சேர்ப்பு நேரத்தில் மதிப்பீடு செய்யப்பட்டன, பிறகு 2010 இல் மதிப்பீடு செய்யப்பட்டது. இதையடுத்து பங்கேற்பாளர்கள் சராசரியாக 18 ஆண்டுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டனர். அதாவது அவர்களுக்கு எலும்பு முறிவு பாதிப்பு உருவாகும் ஆண்டு(2016) வரை கவனிக்கப்பட்டனர்.
முழு கண்காணிப்புகளையும் ஒன்றிணைக்கும் போது, 566 கைகள், 889 மணிக்கட்டுகள், 945 இடுப்பு, 366 கால்கள், 520 கணுக்கால், கிளாவிக்கிள், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற முக்கிய தளங்களில் 467 எலும்பு முறிவுகள் என மொத்தம் 3,941 எலும்பு முறிவுகளை பதிவு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதில், இறைச்சி சாப்பிடுபவர்களை ஒப்பிடும் போது சைவ உணவு உண்பவர்கள் எந்தவிதமான எலும்பு முறிவுக்கும் 9 சதவீதம் அதிக ஆபத்தை எதிர்கொண்டனர்.

அதுவே வீகன்ஸ்களுக்கு 43 சதவீதம் அதிகரித்த ஆபத்து ஏற்பட்டது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் மீன் சாப்பிடுபவர்கள் இடுப்பு எலும்பு முறிவுக்கு சுமார் 25 சதவீதம் அதிகரித்திருந்தனர். அதேபோல சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து இறைச்சி சாப்பிடுபவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. கால் முறிவுக்கான ஆபத்து இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்களில் 81 சதவீதம் அதிகம் என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

%d bloggers like this: