நாம் தினமும் நமது வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இல்லொரு இடத்திற்கு செல்கிறோம். அவ்வாறு நாம் செல்வதற்கு உதவுவது, நமது வாகனத்தின் டயர். அப்படிப்பட்ட டயர், இரண்டு வகைகளாக உள்ளது. அது, டியூப் டயர் மற்றும் டியூப்லஸ் டயர்.
ட்யூப் டயர்:
இது, நாம் கால காலமாக பயன்படுத்தும் டயராகும்.
- இதனை பராமரிப்பதில் நாம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
- இந்த வகையான டயர் பஞ்சராகினால், நாம் நமது வாகனத்தை உருட்டிக்கொண்டு தான் மெக்கானிகிடம் செல்ல வேண்டும்.
- அதனை மீறி வாகனத்தை இயக்கினால், புதிய டியூப் மாற்றவேண்டிய கட்டாயம் வரும்.
- அனுபவமுள்ள மெக்கானிக் கொண்டு பஞ்சர் சரி செய்ய வேண்டும்.
- இறுதியாக, டயர் கழற்றும் பொழுது அதற்கென இருக்கும் கருவிகளை உபயோகித்து வேண்டும்.
டியூப்லஸ் டயர்:
- இந்த டியூப்லஸ் டயரால் நமக்கு பல நன்மைகள் உண்டு.இதில் பஞ்சராகினால், சிறிது நேரம் காற்று டயரில் நிற்கும். அந்த இடைவெளியில் நாம் பஞ்சர் கடைக்கு சென்றுவிடலாம்.
- ட்யூப் டயரை விட டியூப்லஸ் டயரில் அதிர்வுகள் குறைவாக இருக்கும். இதனால் நமது பயணம் சிறப்பாக அமையும்.
- விபத்துகளின் போது டயர் வெடிக்காது.
- இதில் டியூப் இல்லை என்பதால் எடை குறையும். இதனால் வாகனத்தின் மைலேஜ் உயர வாய்ப்பு.
- டயரின் ஆயுட்காலம் சிறப்பாக இருக்கும்.