நீங்கள் பணக்காரர் ஆகப் போவதை குறிக்கும் கனவுகள் இவை தானாம்.. கனவு சாஸ்திரம் கூறும் விளக்கம்..

நாம் அனைவரும் தூங்கும்போது கனவுகளைப் பார்க்கிறோம். அவற்றில் சில கவர்ச்சிகரமானவை, மர்மமானவை, பயமுறுத்தும் கனவுகள் என பல வகையான கனவுகள் வருகின்றன. ஆனால் நாம் கனவு கண்ட உடனேயே 50% கனவுகள் மறந்துவிடுமாம்..

காலையில் எழும் போது கிட்டத்தட்ட 90% கனவுகள் மறந்து வெறும் 10% கனவுகள் மட்டுமே நினைவில் இருக்கும் என்று கனவுகள் பற்றி ஆராயும் ஒரு சில மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கனவுகள் உங்கள் மயக்கமற்ற ஆசைகள் என்று நம்புகிறார்கள். அதே சமயம், கனவு சாஸ்திரத்தின்படி, சில கனவுகள் நாம் பணக்காரர்களாகப் போவதைக் குறிக்கின்றன. இதுகுறித்து பார்க்கலாம்..

எலி தோன்றுவது

உங்கள் கனவில் எலியை கண்டால் உங்களுக்கு பண வரவு அதிகமாக ப்போகிறது என அர்த்தம்..
இது ஒரு சகுனமாகவே பார்க்கப்படுகிறது.. மேலும் வறுமை நீங்கி, நீங்கள் செல்வ செழிப்புடன் வாழப் போகிறீர்கள் என்பதையும் குறிக்கும். உங்களுக்கு இப்படிப்பட்ட கனவு வந்தால், அதை உங்கள் வீட்டிலுள்ள சிறிய குழந்தைக்கு சொல்வதால் அதிர்ஷ்டம் ஏற்படும்..

வெற்றுப் பாத்திரம் :

வெற்று பாத்திரங்கள் உங்கள் கனவில் வந்தாலும் நல்ல அறிகுறி தான் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. இந்த கனவு வரும் நாட்களில் பண வரவைப் பெறப் போவதை குறிக்கிறது..இந்த கனவு வந்தால் நீங்கள் பணக்காரர் ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தம்..

பசுக்கள் மற்றும் சாணம்

கனவில் ஒரு நபர் பசு மற்றும் சாணத்தையும் பார்த்தால், அவரது வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதை குறிக்கும். மேலும் இது போன்ற கனவு கண்டால் உங்கள் வெற்றிக்கு எந்த தடையும் இல்லை என்று பொருள்.. வறுமை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இது போன்ற ஒரு கனவு வந்தால் அதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது.

துடைப்படம் :

துடைப்பம் உங்கள் கனவில் வந்தால், மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டிலிருந்து வறுமை விலகப்போகிறது என்றும் வீட்டில் பண வரவு அதிகரிக்கப்போகிறது என்றும் பொருள். இப்படிப்பட்ட கனவு கண்டால் அதை உங்கள் மனைவி அல்லது தாயிடம் சொல்லுங்கள்.

மின்னணு பொருட்கள் :

உங்கள் கனவில் மின்னணு பொருட்கள் உடைவதை நீங்கள் கண்டால், உங்களுக்கு வறுமை ஏற்பட போகிறது என்பதை குறிக்கும்.. இருப்பினும், இந்த கனவைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது

%d bloggers like this: