ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் உடம்பில் என்னலாம் நடக்கும் தெரியுமா?

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரை வெறும் இனிப்பைத் தருபவை மட்டுமல்ல, ஒருவரை அடிமையாக்கக்கூடிய மோசமான பொருளும் கூட.

இதனை அதிகமாக எடுத்து கொண்டால் , உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தை அதிகரிக்கும், டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே இதனை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.

அதிலும் ஒருவரால் ஒருமாத காலம் சர்க்கரை சாப்பிடாமல் இருக்க முடிந்தால், உடலினுள் நல்ல விஷயங்கள் நடைபெறத் தொடங்கும்.

ஏனெனில் ஒரு மாதமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் ஒரு ஆரோக்கியமான உடலைப் பராமரிக்கலாம்.

அந்தவகையில் சர்க்கரையை தவிர்ப்பதனால் ஏற்பட கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, சர்க்கரை வடிவில் உள்ள கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும் மற்றும் முழுமையான ஆரோக்கிய உணவுகளால் விரைவில் வயிறும் நிரப்பப்படும். இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
  • சர்க்கரையைத் தவிர்ப்பது என்பது குறைந்த கலோரிகளையும், உடல் எடையையும் குறிக்கிறது. அதாவது, உடலில் நல்ல கொழுப்புக்கள் சிறப்பான அளவில் நிறைந்துள்ளது உறுதியாகும்.
  • சர்க்கரையை முழுமையாக தவிர்ப்பதால், உடலில் ஊட்டச்சத்துக்கள் சிறப்பான அளவில் இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஏனெனில் உடலைப் பழுது பார்க்கவும், பாதுகாக்கவும், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.
  • சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதால், இதய நோயின் அபாயம் குறைவாக இருக்கும்.
  • பல் சிதைவு அல்லது பல் சொத்தைகளுக்கு முக்கிய காரணமே சர்க்கரை தான். எனவே சர்க்கரை நுகர்வைக் குறைக்கும் போது அல்லது தவிர்க்கும் போது, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்கள் போன்ற தீவிரமான நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கும். அதுவே அந்த சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, இந்த ஆபத்துக்கள் குறையும்.
%d bloggers like this: