சட்டை பாக்கெட்டில் இந்தப் பொருள்களை மறந்தும் வைக்காதீங்க!

எத்தனை உழைத்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பல நேரங்களில் சம்பாதிக்கும் பணம், சேமிக்கும் பொருள் செலவழியும் போது சலிப்பு தட்டி விடுகிறது. இதை தவிர்க்க நம்மை சுற்றி நேர்மறை அதிர்வுகளை உருவாக்கிக்

கொள்வதால் பணம் சேரும். சேர்ந்த பணம் சுபச்செலவுகளாக, சேமிப்புக்களாக மாறும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து. மூட நம்பிக்கை என ஒரே வார்த்தையில் ஒதுக்கி விட்டாலும் எந்த எதிர்பார்ப்புமின்றி முயற்சித்தும் பார்ப்பதில் தவறில்லை.

அந்த வகையில் சட்டை பை அல்லது பாக்கெட்டில் வைக்கும் பர்சில் பல விஷயங்களை வைத்திருப்பார்கள். அதில் சில விஷயங்களை தவிர்த்தால் பண வரவிற்கான சூழ்நிலை உருவாகும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
நாம் செலவழிக்கும் பணத்திற்கான ரசீதுகளை சட்டைப்பையில் வைப்பது பலரது வழக்கம். அது போன்ற இரசீதுகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் பணவரவு கூடும். செலவழியும் பணமும் சுபச் செலவாக அமையும். டிராகன் போன்ற விநோதமான மன அமைதியை குலைக்கும் புகைப்படங்களை சட்டை பையில் வைப்பதையும் தவிர்ப்பது நல்லது.

கிழிந்த அல்லது சேதமடைந்த பர்சை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பிற்காக மட்டுமல்ல சாஸ்திரத்தின் படியும் சரியானதல்ல. இதனால் இதையும் உடனே மாற்றிவிடலாம். வெளியில் சாப்பிடும் சாக்லேட்டுகள், திண்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக சட்டைப் பையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தாமரை வேர், அரச மலை இலை, சிறிய சங்குகள், மகாலட்சுமியின் புகைப்படம் இவற்றை பர்சில் வைத்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் பணவரவு பெருகுவதையும், தேவையற்ற செலவுகளையும் குறைக்கலாம்.

%d bloggers like this: