மன அழுத்தத்தை குறைக்க தினசரி சமையலில் இதை சேர்த்துக்கோங்க!

இமயமலைச்சாரலில் பாறைகளின் மேல் படிந்திருக்கும் உப்பு இந்துப்பு. இந்த இந்துப்பில் சாதாரண உப்பில் இருப்பதை போலவே அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

இந்து உப்பு இதய பிரச்சனைகள் வராமல் தடுப்பதோடு, நெஞ்சு எரிச்சல் உருவாவதையும் தடுக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை மருந்து தயார் செய்வதில் பலவற்றில் இந்த இந்து உப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாயுப் பிடிப்பு,ரத்த சோகை, மூலம், விக்கல், மூச்சிரைப்பு, இருமல் ,குடல் வாய்வு, மலச்சிக்கல் , தைராய்டு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும், வராமல் காக்கும் தன்மையும் இந்து உப்பிற்கு உள்ளது.ரத்த அழுத்தத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைத்து அமைதியான நிம்மதியான தூக்கம் வரவும், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் உதவுகிறது.

குளிர்காலத்தில் உருவாகும் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் சுவாசம், மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது. ஆயுர்வேத கண் சொட்டு மருந்துகளில் இந்து உப்பு சேர்க்கப்படுகிறது. அனைத்து வகையிலும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும் இந்துப்பை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

%d bloggers like this: