“ரஜினியைக் கண்டுக்காதீங்க…” – ஸ்டாலினுக்கு ஐபேக் அட்வைஸ்
ரஜினி தரப்பு வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறதே…’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடான ஃப்ரெஞ்சு ஃப்ரைஸை சாஸுடன் கழுகாருக்கு நீட்டிவிட்டு, ‘‘சில அ.தி.மு.க பிரமுகர்கள் தமிழருவி மணியனிடம் பேச ஆரம்பித்திருப்பதைக் கூறுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்தபடி ஃப்ரைஸை மென்றவர், “தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர் தன் சம்பந்தி மூலமாக ரஜினி தரப்பிடம் பேசியிருக்கிறாராம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
`41 தொகுதிகள் தரும் கட்சிகளுடனேயே கூட்டணி’ – பிரேமலதா அறிவிப்பு சாத்தியமா?
தே.மு.தி.க-வின் தற்போதைய வாக்குவங்கி, அ.தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சியின் நிலை, தி.மு.க கூட்டணிக்குப் போவதற்கான சாத்தியங்கள், மிக முக்கியமாக மூன்றாவது அணி அல்லது தனியாகக் களமிறங்குமளவுக்கு தே.மு.தி.க தற்போது பலமாக இருக்கிறதா?
“2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க-வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தே.மு.தி.க. அதேபோல, வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் 41 தொகுதிகளைத் தரும் கட்சிகளுடன்தான் தே.மு.தி.க கூட்டணி அமைக்கும். இல்லையெனில் தனித்துக் களமிறங்கும்”
`ரஜினியின் மனமாற்றம்… கழகம் கட்சியானதா?’ – மக்கள் மன்றத்தின் திடீர் அறிவிப்பின் பின்னணி!
ரஜினி கட்சியின் பெயர், கட்சி அலுவலகம், சின்னம் ஆகியன குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. கட்சியின் பெயர் `மக்கள் சேவை கட்சி’ என்றும், சின்னம் `ஆட்டோ’ எனவும் கட்சி அலுவகலம் செயல்படும் இடம் என சென்னை எர்ணாவூரில் உள்ள முகவரியை குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது போன்ற தகவல்கல் இடம்பெற்றுள்ளன என்ற போதிலும் அதில் ரஜினியின் பெயர் இல்லை.