சசிகலாவிற்கு பெரிய ஆப்பாக வைக்க காத்திருக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார்.

சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசை அமைத்து கொடுத்ததுடன், கட்சியின் துணைப் பொதுச்செயலராக டிடிவி தினகரனை நியமித்திருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் பதிவுடன் தான் சசிகலா சிறைக்கு சென்று இருந்தார். ஆனால், அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா எதிராக மாறினார்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் சசிகலா பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் சசிகலா நீடித்து வருகிறார். இதனால்தான் தினகரன் ஆரம்பித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலாவுக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுக கைப்பற்றுவதுதான் சசிகலாவின் முதற்கட்ட திட்டமாகும். அதற்கு ஏற்ப தற்போது காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்கள் எடப்பாடிபழனிசாமி பின்னால் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவை கைப்பற்ற முடியவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பின் கண்டிப்பாக கைப்பற்ற முடியும் என நம்புகிறார்.

இந்த தேர்தலில் அதிமுக தோற்கும் பட்சத்தில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பலவீனமாகி விடுவார்கள். இதனை பயன்படுத்தி மீண்டும் அதிமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடலாம் என்று சசிகலா திட்டம் போட்டுள்ளார். அதிமுக தங்கள் கையை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தற்போது பிடியை இருக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளனர். இதனால்தான் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்னதாக அவசர அவசரமாக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளனர்.

பொதுக்குழுவில் வைத்து சசிகலா மட்டுமின்றி மேலும் பலரை அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்துள்ளனர். சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்ற காரணத்தைக் காட்டி கட்சியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளனர். கடந்த ஞாயிற்று கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: