ராமதாஸுக்கு “இந்த” 2 ஆப்ஷன்தான்.. கருணாநிதி ஸ்டைலுக்கு மாறுமா அதிமுக.. பாமகவை கழற்றி விடுமா!

அதிமுக கூட்டணியில் பாமக தொடருமா என்ற சந்தேகம் நீடித்தபடியே உள்ளது.. இந்நிலையில், பாமகவை கழட்டிவிட சொல்லி அதிமுக தலைமையை கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.. அந்த வகையில் பாமகவுக்கு இப்போதைக்கு இருப்பது ரெண்டு ரெண்டு ஆப்ஷன்கள்தான்!

அதிமுக கூட்டணியை உறுதி செய்ய, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் டாக்டர் ராமதாஸை ஏற்கனவே சந்தித்து பேசினர்.

அப்போது ஒருசில கோரிக்கைகளை ராமதாஸ் தரப்பு வைத்துள்ளது..

தங்களுக்கு துணை முதல்வர் பதவி, அதிக இடங்கள், அதிலும் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் செய்ய வேண்டும், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

ஆனால், இதையெல்லாம் கேட்டு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் அமைச்சர்கள் சற்று திணறியதாக தெரிகிறது.. ஆனால், உறுதியான பதிலையும் சொல்லாமல், வரும் 27ம் தேதி நடக்க உள்ள அதிமுக பிரசார பொதுக்கூட்டத்திற்கு, கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் டாக்டர் ராமதாஸை அழைத்து விட்டு வந்துள்ளனர். ஆனால், பாமகவுக்கு எத்தனை தொகுதி, எந்நெந்த தொகுதி என எந்த முடிவும் எடுக்காத நிலையில் பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ராமதாஸ் அமைச்சர்களிடம் திட்டவட்டமாக சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

60 சீட்?

அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு 60 சீட் தந்தால், தங்களுக்கும் அதே அளவு சீட் தர வேண்டும் என்று பாமக கேட்டு வருவதாக தெரிகிறது.. கூட்டணிகளுக்கே இந்த அளவுக்கு சீட்டுகளை அதிமுக ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லை.. அதேபோல, தேர்தலுக்கு முன்பாகவே இடஒதுக்கீடு சாத்தியமா என்றும் தெரியவில்லை. மேலும், துணை முதல்வர் என்று கட்சியில் ஒருவர் இருக்கும்போது, இன்னொரு துணை முதல்வர் பதவியை அதிமுக மேலிடம் வழங்குமா என்றும் உறுதியாக தெரியவில்லை.. ஆக, பாமக கேட்ட கோரிக்கைகளை உடனடியாக அள்ளி தர முடியாத நிலையில் அதிமுக மேலிடம் உள்ளது.

அறிவுறுத்தல்

இந்த சமயத்தில்தான், இன்னொரு விஷயம் கசிந்து வருகிறது.. அதாவது, டாக்டர் ராமதாஸின் பேர அரசியலுக்கு துணை போக வேண்டாம் என்று அதிமுகவினர், தங்கள் தலைமையை அறிவுறுத்தி வருகின்றனராம்.. குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுகவினர் இவ்வாறு கூறி வருவதாக தெரிகிறது..

இடைத்தேர்தல்

அதாவது, “2019 எம்பி தேர்தலோடு, 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது… அதில் வட தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருந்ததால் தான் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் என்பதால் தான், நாம் பாமகவுடன் கூட்டணி வைத்தோம்.. பேர அரசியலுக்கும் சரண் அடைந்தோம்… ஆனால், எம்பி தேர்தலில் பாமக படுதோல்வி அடைந்துவிட்டது.

10 தொகுதிகள்

வட தமிழகத்தில் 10 தொகுதிகளில் 7 தொகுதி திமுக வென்றுவிட்டது. அதனால், எப்படி பார்த்தாலும் இழப்பு நமக்குதான்.. அதுவும் இல்லாமல், அவர்களுக்கு முன்பு போல, வன்னியர் மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை… அவர்கள் நடத்திய போராட்டத்தை தமிழகமே வேடிக்கை பார்த்தது.. ரயில் மீது கல்லெறிந்தது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது என்று விரும்பத்தக்க செயலில் ஈடுபட்டத்தையும் அனைவரும் கவனிக்கவே செய்தனர்.

மாற்று சமூகம்

இப்படிப்பட்ட சூழலில், பாமகவுடன் கூட்டணி வைத்தால், மாற்று சமூகத்தினரின் வாக்கும் நமக்கு கிடைக்காமல் போய்விடும்… அதனால், பாமகவுக்கு அவ்வளவு சீட் தருவதைவிட, அதில் பாதியை தேமுதிகவுக்கு தந்தாலே போதும், பம்பரமாக சுழன்று வேலை பார்ப்பார்கள்.. இப்போதுவரை நமக்கு எதிராக அவர்கள் எதையும் செய்தது இல்லை.. இதுவரை வன்னிய சமுதாயத்திற்கு செய்த கோரிக்கைகளை சொல்லியே நாம் வாக்கு கேட்போம்.. நிச்சயம் நமக்கு வன்னியர்களின் ஆதரவு கிடைக்கும்” என்றார்களாம். இதையும் அதிமுக மேலிடம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்ஷன்கள்

ஒருவேளை இந்த தகவல்கள் உண்மையானால், பாமகவுக்கு 2 ஆப்ஷன்களே உள்ளன.. இப்போதைக்கு திமுகவின் கதவு பாமகவுக்கு அடைக்கப்பட்டு விட்டது.. தயாநிதி மாறன் பேச்சிலேயே அது உறுதியாகிவிட்டது.. அதையும் மீறி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், நிச்சயம் துணை முதல்வர், மற்றும் கேட்கும் தொகுதிகளை திமுக வழங்குமா என்பது சந்தேகம்தான்… காரணம், அவர்கள் 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார்கள்.. எனவே, ஒன்று அதிமுக தரும் சீட்களை பாமக பெற்று கொண்டு சமரசத்தில் ஈடுபட வேண்டும்.. மற்றொன்று கமல் தலைமையிலான 3வது அணியுடன்தான் சேர வேண்டும்… அல்லது ரஜினியுடன் சேரவேண்டும்.. அதுவும் அவர் கட்சி ஆரம்பித்தால்!

%d bloggers like this: