வெள்ளைப்படுதலில் இத்தனை வகைகளா? பெண்களே…உடனே கவனியுங்கள்!

எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல். இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை.

பொதுவாகப் பெண்களின் பிறப்புறுப்பு செல் சுவர்களில் நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் இயற்கையாகச் சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்தத் திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பைப் பாதுகாக்கும். மாதவிடாய் காலத்துக்கு முன்னும் பின்னும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படக்கூடும்.
பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பைப் பாதித்தால், அந்தப் பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாறும். நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். இப்படி, தொற்று காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்னை ஏற்படலாம். பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவதற்கு முன்பு வெள்ளைப்படுதல் தொடங்கும்.
இவை சாதாரணமாக இருக்கும் வரை பிரச்சனையில்லை. அவை அசாதாரணமாகும் போது அதற்குரிய கஷாயம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S. வெள்ளைப்படுதல் கஷாயம் பெண்களுக்கு ஏற்படுகின்ற கோளாறுகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது மாதவிலக்கு கால பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் பிரச்சனை.
வெள்ளைப்படுதல் என்பது சாதாரண பிரச்சனை அல்ல, இது முற்றிப்போகும்போது கருப்பை வாய் புற்று கூட ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது. இந்த  வெள்ளைப்படுதல் பிரச்சனை பூப்படைந்த பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை இயற்கை முறையில் குணப்படுத்த வெள்ளைப்படுதல் கஷாயம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெள்ளைப்படுதல் கஷாயம்
செய்யத் தேவையான பொருட்கள்
கோரைக்கிழங்கு சூரணம் – 3 கிராம்,
கடுக்காய் சூரணம் – 3 கிராம்,
எள்ளு சூரணம் – 3 கிராம்,
அருகம்புல் சூரணம் – 3 கிராம்,
சீந்தில் கொடி சூரணம் – 3 கிராம்.
செய்முறை
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, 100 மிலி தண்ணீராக வற்றியவுடன், இறக்கி வடிகட்டி வைக்கவும். காலை ஒருவேளை உணவுக்கு முன்பு, இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வர வேண்டும்.
மருத்துவ குணங்கள்
பிறப்புறுப்பு அரிப்பு, வெள்ளைப்படுதல், மாதவிலக்கு கால கோளாறுகள் இவற்றுக்கு இந்த வெள்ளைப்படுதல் கஷாயத்தை 48 நாட்கள் என்று ஒரு மண்டலம் சாப்பிட்டு வர அனைத்து கோளாறுகளும் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படுவதை பார்க்கலாம்.
முதல் 5 இடங்களுக்குள் இந்தப் பிரச்சனை!
பெண்களுக்கு பிறப்புறுப்புக்கள் சம்பந்தப்பட்ட சர்விகல்  அல்சர், புற்று நோய் போன்ற  ஆரோக்கிய குறைவு பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட பட்டியலின் முதல்  10 இடங்களில் ஐந்து இடங்களுக்குள்ளே இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையும் இருக்கும்.  வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக காணப்படுவதற்கு காரணம் பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  
இத்தனை வகை வெள்ளைப்படுதலா?
வெள்ளைப்படுதல், வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களிலும், சளி போல, தயிர் போல என்று பல வகைகளில் இருக்கிறது. ஒவ்வொரு விதமான வெள்ளைப்படுதலுக்கும் ஒவ்வொரு அறிகுறிகள் பெண்களின் உடலில் தென்படும்.
அறிகுறிகள் என்னென்ன?
வழக்கத்துக்கு மாறாக தலைமுடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும். முகத்தில் பொலிவு  இல்லாமல் இருக்கும், மூக்குக்கு மேலே கருமை நிறத் தழும்புகள் ஏற்படுவது, உடல் மெலிந்து உள்ளுக்குள் உருகிக்கொண்டே போவது, கழுத்து வலி, இடுப்பு வலி என்று அவதிகள் தருவது, சோர்வு, எப்போதும் படுத்துக்கொண்டே இருந்தால் சந்தோஷமாக இருக்கும் என்பது போன்ற நிலை… இது தவிர மன  ரீதியாக எப்போதும் காரணமில்லாமல் சண்டையிடுவது, எதற்கெடுத்தாலும்  அழுவது, அதிகமாக கவலைப்படுவது, தூக்கமின்மை என்று இத்தனை அறிகுறிகளை காண்பிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த அருமருந்தாக இந்த வெள்ளைப்படுதல் கஷாயம் இருக்கிறது.
ஆண்களுக்கு வெட்டை நோய்!
வெள்ளைப்படுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமென்று இல்லை, ஆண்களுக்கும் வெட்டை நோய் என்று இருக்கிறது. சிறுநீர்  கழிப்பதற்கு முன்பு வெள்ளையாக திரவம் வழிதல் அல்லது சிறுநீர் கழித்த பின்பு வெள்ளை  திரவம் வழிதல், சிறுநீரில் வெண்திரவமாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த வெள்ளைப்படுதல் கஷாயம் நல்ல தீர்வாக இருக்கும்

%d bloggers like this: