அதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்!

அதிமுக கூட்டணியில் 33 தொகுதிகளை எதிர்ப்பார்க்கிறது பாமக. தைலாபுரம் தோட்டத்தில் தன்னை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் அன்பழகனிடம் இதனை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாகவும் பாமக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அந்த 33 தொகுதிகளில் 28

தொகுதிகள் பாமகவுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களிலும் மீதமுள்ள 5 தொகுதிகள் தென் மாவட்டங்களிலும் எதிர்பார்க்கிறாராம் டாக்டர் ராமதாஸ்.

அந்த வகையில் எந்த கட்சியினுடன் கூட்டணி வைத்தாலும் பாமக முன் வைக்கும் தொகுதிகளின் பட்டியல் ரகசியமாக கசிந்திருக்கிறது. அந்த வகையில், வேளச்சேரி அல்லது சைதாப்பேட்டை, அம்பத்தூர் அல்லது மாதவரம், வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர், கும்மிடிபூண்டி, சோழிங்கநல்லூர், திருப்போரூர், திருத்தணி, சோளிங்கர், கலசபாக்கம், அணைக்கட்டு, செய்யார், உத்திரமேரூர், வானூர் (தனி) , மைலம் அல்லது செஞ்சி, பண்ருட்டி அல்லது சிதம்பரம், ஜெயங்கொண்டம், குன்னம், மயிலாடுதுறை அல்லது பூம்புகார், வேதாரண்யம், வேப்பனஹள்ளி அல்லது கிருஷ்ணகிரி, பெண்ணாகரம், மேட்டூர், தர்மபுரி, வீரபாண்டி, சேலம் மேற்கு, பரமத்தி வேலூர், பவானி, அந்தியூர் ஆகிய 28 தொகுதிகளை தயாரித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

%d bloggers like this: