சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!

சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று.

சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை சார்ந்த அவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிப்பதாலும் அவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்பொழுது அதிகமாக சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருள்:

1. அதிமதுரப் பொடி அரை ஸ்பூன்
2. இஞ்சி சாறு ஒரு ஸ்பூன்
3. எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன்
4. தேன் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
3. அதில் அரை ஸ்பூன் அளவு அதிமதுரப்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
4. ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக கொதித்து வர வேண்டும்.
5. எப்பொழுது இஞ்சியை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி இஞ்சி சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
6. ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்து விட்டு மிதமான சூட்டில் இருக்குமாறு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்.
7. இதில் நாம் ஏற்கனவே செய்து வைத்திருந்த இஞ்சி சாற்றை ஊற்றவும்.
8. பின் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
9. தேவையான அளவிற்கு ஏற்ப தேன் சேர்த்து நன்றாக கலந்து பருக வேண்டும்.
10. இது படுக்க செல்வதற்கு முன் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்குப் பின் இதை உண்டு வரவேண்டும்.
11. இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.
12. ஒரு வாரத்திற்கு மேல் செய்ய வேண்டாம்.
13. ஒரு வாரத்திலேயே உங்களது மூச்சுப் பாதையில் உள்ள பிரச்சனை நீங்குவது கண்கூடாக காண்பீர்கள் பயன்படுத்தி கண்டிப்பாக பயன்பெறுங்கள்.

%d bloggers like this: