ஆவியில் வெந்தால் ஆரோக்கியம்!

கடந்த சில ஆண்டுகளாக, ‘ஹைப்போ தைராடிசம்’ எனப்படும், தைராடின் அளவு குறையும் கோளாறால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பத்தில், எட்டு பெண்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. அயோடின் சத்து குறைபாட்டால், தைராய்டு பிரச்னை வரும் என்பதால், மத்திய – மாநில அரசுகள், சமையலுக்கு பயன்படும் உப்பில், அயோடின் சேர்ப்பதை கட்டாயமாக்கியது; ஆனாலும் பாதிப்பு குறையவில்லை.
என்ன காரணம்


பெற்றோருக்கு தைராய்டு குறைபாடு இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் வருகிறது. இது தவிர, உணவுப் பழக்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. 30 வயதிற்குட்பட்ட பெண்கள் தைராய்டு கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். எதற்கும் நேரம் இல்லாமல், பரபரப்பாக செயல்படும் போது, என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியவில்லை.
வெளியில் கிடைப்பதை, அந்த நேர பசிக்கு வாயில் போட்டுக் கொள்கின்றனர். ‘ஜங்க் புட்’ அதிகம் சாப்பிடுகின்றனர். ‘ஏசி’ அறையில் அமர்ந்து வேலை செய்யும் பெண்கள், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதில்லை. ‘ரிலாக்ஸ்சேஷன்’னுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை.
பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடுவ தில்லை. பொரித்த அசைவ உணவுகளை சாப்பிடுவது அதிகம். வறுத்த, பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால், அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் பாரம்பரிய உணவுகளை, பெரும்பாலும் தவிர்த்து விடுவதும், தைராய்டு பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். இட்லியைப் போல சிறந்த உணவு வேறு இல்லை என்பது, உலகம் முழுதும் கூறுகின்றனர்; ஆனால், நாம் அதை தவிர்த்து, நுாடுல்ஸ் சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.
அடிப்படையான சில விஷயங்களை பின்பற்ற துவங்க வேண்டும். காலை உணவில், இட்லி, தோசை, இடியாப்பம் என்று, ஆவியில் வெந்த வழக்கத்தில் உள்ளதை சாப்பிட வேண்டும். குறைந்தது, 45 நிமிடங்கள் நடைபயிற்சி. மனதை ரிலாக்சாக வைக்க தியானம், யோகா என்று இருந்தால், தைராய்டு மட்டுமல்ல, எந்தப் பிரச்னையும் வராது.
டாக்டர் தேவகி,
பொதுநல மருத்துவர், சென்னை.
doctordevaki@gmail.com

%d bloggers like this: