உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது.

ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது.

உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும்.

எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும்.

சர்க்கரை டப்பாவில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

மீந்த இடியாப்பத்தை தயிரில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.

முட்டைகோஸின் தண்டு அவ்வளவு சத்து நிறைந்தது. கோசை சமைத்துவிட்டு அதனை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்து சாப்பிடுங்கள்.

தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க சிறிது தேங்காய்த் துண்டை அதனுள் போட்டு வையுங்கள்.

%d bloggers like this: