சசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..!

சசிகலாவின் விடுதலையால் அதிமுக, அமமுக கட்சிகள்இணையுமா?
சசிகலாவின் விடுதலையால் அதிமுக, அமமுக கட்சிகள்இணையுமா?

சென்னை: சசிகலா வருகையை வைத்து பாஜக காய்களை நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.. இதனால் அதிமுகவுக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்த கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா விரைவில் ஜெயிலில் இருந்து வர உள்ளார்.. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி தயாராகி வருகின்றன. அதேபோல, சசிகலாவின் வருகை 3 கட்சிகளில் தாக்கத்தை தரும் என்றும் தெரிகிறது. ஒன்று அமமுக, இரண்டு திமுக, மூன்று பாஜக!

அமமுகவை பொறுத்தவரை இப்படி ஒரு கட்சியை சசிகலா நேரில் பார்த்ததே கிடையாது.. அவர் ஜெயிலுக்கு சென்றபிறகுதான் தொடங்கப்பட்டது..

அனைவருமே இவரது ஆதரவாளர்கள் என்றாலும், அதிமுகவை அமமுகவால் மிஞ்ச முடியவில்லை.

எதிர்பார்ப்பு

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பேயே, “அதிமுக குறித்து யாரும் தவறாக பேச வேண்டாம்.. நம் குறி திமுக மட்டும்தான்” என்று டிடிவி தினகரன் தன்னுடைய நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வந்தது.. அதற்கேற்றபடி இரு தரப்புமே ஒருத்தரை ஒருத்தர் விமர்சித்து கொள்ளவே இல்லை.. அந்த வகையில், சசிகலா வரும் சமயம், அதிமுக – அமமுக ஒன்றிணையும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

சசிகலா

இதில் அதிமுகவை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்கள்.. சசிகலா வருகையினால் தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று முதல்வர் அடிக்கடி பேட்டி தந்து கொண்டே இருக்கிறார்.. எனினும் அதிமுகவில் உள்ள சில மூத்த தலைகள், சில அமைச்சர்கள் சசிகலாவின் வருகைக்காகவே “வெயிட்டிங்”!

பாஜக

சம்பந்தப்பட்ட இந்த 2 கட்சிகளைவிட, சசி வருகையில் மிக தீவிரமாக உள்ளது பாஜகதானாம்.. இதற்கு காரணம், எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்வதில் அந்த கட்சிக்கு தயக்கம் உள்ளது.. அதிருப்தி உள்ளது.. ரஜினிக்காக காத்து கொண்டிருந்தவர்கள், கடைசியில் ஏமாந்து போய்விட்டதால், வேறு ஆப்ஷனாக சசிகலாவை எதிர்நோக்கி உள்ளதாக தெரிகிறது.

வேட்பாளர்

எப்படியும் அதிமுக – அமமுக இணைந்தால் மறுபடியும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை வரவே செய்யும்.. ஒருவேளை இரு கட்சிகள் இணைப்பிற்கு எடப்பாடியார் சம்மதிக்கவில்லை என்றால் கட்சியை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவையும் அமமுகவையும் இணைக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

காரணம்

இதுதான் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.. இப்போதுதான் படாதபாடுபட்டு, முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ்ஸை வைத்தே சொல்ல வைக்கும் முடிவு எட்டப்பட்டது.. பிரச்சாரமும் தொடங்கியாகி விட்டது.. இந்த நேரத்தில் கட்சியை உடைப்பது, சின்னத்தை முடக்குவது போன்றவை எழுந்தால், அது மறுபடியும் சிக்கல் என்றே கருதுகிறார்.

முதல்வர் வேட்பாளர்

அதனால் சசிகலா வருகையின்போது எடப்பாடியார் என்ன செய்ய போகிறார்? அமமுகவை இணைத்து கொள்வாரா? மறுபடியும் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை எழுந்தால் அதற்கு என்ன செய்வார்? என்றெல்லாம் தெரியவில்லை.. அதேபோல பாஜகவின் பிளானும் ஒர்க் அவுட் ஆகுமா என்று தெரியவில்லை. . பார்ப்போம்!

%d bloggers like this: