உதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்..! கலகலக்கும் திமுக மேலிடம்..! அதிர்ச்சியில் நிர்வாகிகள்..

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் உதயநிதி சூறாவளி பிரச்சாரம் செய்வதையும், அதற்கு திமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையும் அவரது குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரே விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். இது திமுகவின் உள் அரங்க கூட்டத்தில் உதயநிதி பேசியது. பிரதான ஊடகங்கள் எதுவும் இந்த விஷயத்தை செய்தியாக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் உதயநிதியின் இந்த பேச்சு வைரலாக்கப்பட்டது. ஆனால் அதனை வைரலாக்கியது அதிமுகவினரோ திமுகவிற்கு எதிரானவர்களோ இல்லை.

பெரும்பாலும் திமுக ஆதரவாக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடக்கூடியவர்களை உதயநிதியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சசிகலாவையும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் இணைத்து உதயநிதி மிகவும் கொச்சையாக பேசினார். இதனையும் பிரதான ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மறுநாள் உதயநிதியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த முறையும் திமுக ஆதரவாக கருத்துகளை வெளியிடும் குறிப்பிட்ட அந்த சிலரே உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த வீடியோவை பரப்பினர். அதோடு மட்டும் அல்லாமல் உதயநிதியை ஸ்டாலின் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தினர்.

இப்படி உதயநிதிக்கு எதிராக சர்ச்சையாக்கப்பட்ட இரண்டு விஷயங்களுமே திமுகவின் உள்குத்து அரசியல் என்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் உதயநிதி மேற்கொண்டுள்ள பிரச்சாரம் கடைசி நேரத்தில் திமுகவிற்கு எதிராக மக்களை திருப்பும் என்று பிரசாந்த் கிஷோர் டீம் அக்கட்சி மேலிடத்தை எச்சரித்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் – துர்கா ஆகியோர் இதனை ஏற்கவில்லை. இப்போது முதலே உதயநிதியை புரமோட் செய்ய வேண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு உதயநிதியை புரமோட் செய்தால் அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் வாரிசு அரசியல் என்கிற விஷயத்தை தேர்தல் நெருஙகும் சமயத்தில் மக்கள் மத்தியில் அதிமுக ஆழமாக பதிய வைத்தால், இளைஞர்கள், இளம் பெண்கள் திமுகவிற்கு வாக்களிப்பதை தவிர்க்க கூடும் என்று பிரசாந்த் கிஷோர் டீம் தொடர்ந்து கூறி வருகிறது. இதனை ஸ்டாலினுக்கு நெருக்கமான அவரது மிக மிக முக்கியமான உறவினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தில் ஸ்டாலினைஅந்த உறவினரால் சமாதானம் செய்ய முடியவில்லை என்கிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கம் அல்லது சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை போட்டியிட வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இதனையும் ஸ்டாலின் குடும்பத்தின் முக்கிய நபர் விரும்பவில்லை என்கிறார்கள். இந்த முறை தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைக்கும் என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். ஆனால் வாரிசு அரசியல் விவகாரத்தால் அதற்கு சிறிய அளவில் கூட பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அவர் கவனமாக காய் நகர்த்துகிறார். அதே சமயம் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தேர்தலில் உதயநிதியும் வென்று எம்எல்ஏ ஆகிவிட்டால் அமைச்சர் பதவி நிச்சயம் என்பதால் உறவினர் ஜெர்க் ஆவதாக சொல்கிறார்கள். ஸ்டாலின் கூட திமுகவில் இப்படி அசுர வேகத்தில் வளர்ந்தது இல்லை என்பதால் தான் சமூக வலைதளங்களில் தனது அடிஆட்களாக இருக்க கூடிய சிலரை பயன்படுத்தி அந்த உறவினர் உதயநிதிக்கு எதிராக காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள்.

ஆயிரம்விளக்கு மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை போட்டியிடாமல் தடுக்க அவர் செய்யும் ஏற்பாடுகளை அறிந்து திமுக மேல்மட்ட நிர்வாகிகளே அதிர்ந்து போயுள்ளதாகவும் உதயநிதியும் இதனை அறிந்து அவரை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்

%d bloggers like this: