பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்?

அரசியலில் கோலோச்சவும், தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவும் இன்றயை சூழலில் தேவை முதலில் நிறைய பணபலம், பிறகுதான் வலிமை மிகுந்த தலைவர்கள், திறன்மிக்க நிர்வாகிகள், உழைக்க தொண்டர்கள், கட்சியின் மக்களை கவரும் கொள்கை,

வளம்பெருக்கும் திட்டங்கள் என அனைத்துமே அடங்கும். எனவே ஒரு கட்சியிடம் பணபலம் மிகுந்தால் மட்டுமே அரசியலில் நிலைக்கவும், தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவும் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதற்கு காரணம் அன்றைய சூழலில் கட்சி கொள்கைகள், தலைவரின் பேச்சுக்களால் கவர்ந்திழுக்கப்பட்டு தொண்டர்கள் கூட்டமாக கூடினர். வீட்டயையும் மறந்து கட்சி கொடி கட்டி, மைக் பிடித்து கத்தி, ஊரெல்லாம் உழண்டு கட்சி பணியை கவனித்தனர் மாறாக ஒருவேளை உணவு அந்த தொண்டர்களுக்கு போதுமான இருந்தது காரணம் தொண்டர்களின் உண்மையான விசுவாசம்.

ஆனால் இன்றோ கட்சியின் கொள்கைகள் அச்சடிக்கப்பட்ட நோட்டீசை விநியோகம் செய்யும் வேலை முதல் மாநாட்டுக்கு கூட்டத்தை சேர்த்து காண்பிப்பது வரை அணைத்திலும் பணபலம் இன்றி ஏதும் காரியம் நடக்காது. என்னதான் மக்கள் ஓட்டு போட்டாலும் கட்சி வேலைகளை செய்வதற்கு பணமின்றி ஆட்கள் வரமாட்டார்கள் என்ற நிலை உருவாகிவிட்டது.

இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் ஓர் கட்சி அதுவும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல கோடிகள் செலவு செய்து விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியில் வலம் வந்து ஆட்சியை பிடிக்க முயல்கிறது என்றால் அதற்கு ஏது அவ்வளவு பணம் பலம்? அல்லது யார் உதவுகிறார்கள்? அல்லது இப்படி செலவு செய்யும் பணம் அனைத்தும் கடந்த ஆட்சிகாலத்தில் சம்பாதிக்கப்பட்டதா? அதற்கு கணக்குகள் சரிவர காண்பிக்கப்பட்டதா? என்று பல கேள்விகள் எழுகின்றன.

அந்த கட்சி திராவிட முன்னேற கழகம், கடந்த 2011’ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்று எதிர்கட்சி வரிசையில் இல்லாத அளவிற்கு அரசியலில் மக்களால் ஒதுக்கப்பட்ட ஓர் கட்சி என்றால் அது தி.மு.க’தான். அன்று முதல் இன்று வரை கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமரவில்லை மக்களால் அனைத்து தேர்தல்களிலும் புறக்கணிக்கப்பட்டது.

அடுத்து வந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை தழுவியது. இடையில் வந்த இடைத்தேர்தலிலும் தி.மு.க’வால் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வெற்றியை பெறஇயலவில்லை தி.மு.க’வால். இப்படிப்பட்ட நிலையில் தி.மு.க செய்யும் செலவுகள் அனைத்தும் மலைப்பாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளை விடுங்கள் கடந்த மார்ச் 24’ம் தேதி அன்று நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமுதல் தி.மு.க செய்த செலவுகளை நினைத்தால் எப்படி ஒரு மாநிலகட்சிக்கு இப்படி பொருளாதார நிலை என யோசிக்க தேன்றும்.

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனோ தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது முதல் நாட்டில் பல்வேறு தொழில்கள், தொழிலதிபர்களின் வருமானம் சரிவை சந்திக்க துவங்கின.

பலர் புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே செய்யும் தொழிலில் முதலீடு செய்யவும் அஞ்சினர். ஆனால் தி.மு.க’வோ இதற்கு நேர்எதிர்! நிகழ்சிகள், போராட்டங்கள், நிவாரணங்கள், பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள், டிஜிட்டல் பிரச்சாரங்கள், முப்பெரும் விழா, மத்திய, மாநில அரசை குறைகூறும் அனேக கூட்டங்கள் என பல நூறு கோடிகளை செலவு செய்துள்ளது. இது எப்படி சாத்தியம்?

தி.மு.க கொரோனோ ஊரடங்கிற்கு பிறகு அதிகமாக செலவு செய்த முக்கிய நிகழ்வுகளை அலசி பார்த்தால் மலைப்பாக உள்ளது.

1) ஒன்றிணைவோம் வா – கொரோனோ தொற்று காரணமாக அரசால் விலகி இருக்க அமல்படுத்தப்பட்ட காலத்தில் “ஒன்றிணைவோம் வா” என பெயரிட்ட ஒரு நிகழ்வை தி.மு.க நிகழ்த்தியது. மே, ஜூன், ஜூலை என கிட்டதட்ட 3 மாத காலம் தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற மாநகரங்களிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நிவாரணம் தருகிறோம் என்றும், மக்களுக்கு உதவிகள் செய்கிறோம் எனவும் தி.மு.க’வினர் கூட்டங்கள் போட்டு விளம்பரப்படுத்தினர்.

தோராயமாக ஒரு கூட்டத்திற்கு குறைந்த பட்சம் 3 லட்சம் செலவு என்றாலும் கூட மூன்று மாத காலகட்டங்களில் 100’க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளது தி.மு.க இதன் மூலம் 3 கோடிக்கு ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சிக்கு செலவு செய்துள்ளது. இது குறைந்தபட்ச தொகைதான் ஏனெனில் மாநகரங்களில் ஒரு கூட்டம் நடத்த 10 லட்சம் செலவு செய்தாக வேண்டும் சிறு நகரங்களில் வேண்டுமானால் 3 லட்சம் போதுமானதாக இருக்கும். இப்படி கோடிகளை இறைத்து நடத்தப்பட்டது ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சி! ஏது பணம்?

2) எல்லோரும் நம்முடன் – இது தி.மு.க’வின் உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிகழ்ச்சியாகும். அனைத்து கட்சிகளும் உறுப்பினர்களை சேர்ப்பது என்பது ஒரு கட்சிக்கு ஆணி வேர் அதனை குறை கூறவில்லை ஆனால் தி.மு.க இதனை நடத்திய ஆடம்பர முறைதான் இங்கு கேள்வியே. குறைந்தது 3 மாதங்கள் இதன் விளம்பரம் வெளிவந்தது அனைத்து இணையதள சேனல் மற்றும் தனியார் சேனல்களிலும்.

இது போதாக்குறைக்கு யூ ட்யூப், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து விதமான தளங்களிலும் விளம்பரபடுத்தியது மட்டுமல்லாமல் சாலையில் பேனர்கள், செய்தித்தாள்களில் விளம்பரம், சுவர்களில் ஓவியம் என 3 மாதங்கள் திரும்பும் அணைத்து பக்கங்களிலும் தி.மு.க ‘எல்லோரும் நம்முடன்’ என்ற வாசகம்தான் இதற்கு தோரயமாக ஒரு மாதத்திற்கு 100 கோடி என்றால் மூன்று மாதத்திற்கு 300 கோடியை இறைத்தது.

இது குறைந்தபட்ச தொகைதான் ஏன் இன்றும் இணையத்தில் அந்த விளம்பரங்கள் வருகின்றன இலவசமாக இல்லை அதுவும் பணம்தான். அப்படியெனில் 500 கோடியை தாண்டும் ‘எல்லோரும் நம்முடன்’ விளம்பர செலவு, தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி உறுப்பினர் சேர்க்கையை ‘காஸ்ட்லியாக’ நடத்தியது என்றால் அது வரலாற்றில் தி.மு.க மட்டுமே! ஏது பணம்?

3) முப்பெரும் விழா – தி.மு.க’வின் கட்சி விழா இது. கொரோனோ ஊரடங்கு காரணமாக மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமும் தனித்தனியா நடத்தப்பட்டது. உதாரணமாக கோவை, காஞ்சிபுரம், தஞ்சை, மதுரை என மண்டலங்கள் வாரியாக தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் காணொளி காட்சி வாயிலாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசும் நிகழ்வாக நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்கும் நிர்வாகிகள் ஒங்வொரு பகுதியிலும் திருமண மண்டபங்களில் ஒருநாள் முழுவதும் அமரவைக்கப்பட்டனர் இதற்கு தோராயமாக செலவு ஒரு பகுதியில் திருமண மண்டபத்தில் நிர்வாகிகளை வைத்து உணவு, மண்டப வாடகை என வைத்துக்கொண்டால் 2 லட்சம், இதுவே தமிழகம் முழுவதும் ஒரு மண்டலத்திற்கு 20 இடங்கள் என்றால் 8 மண்டலங்களுக்கு 160 இடங்கள் ஆக மொத்தம் தோராயமாக 3 கோடியே 20 லட்சம் இதற்கு விளம்பர செலவுகளுடன் சேர்த்து 5 கோடி குறைவான மதிப்புடன். இப்படி கோடிகளில் முப்பெரும் விழா நடந்த ஏது பணம்?

4) தமிழகம் மீட்போம் – தி.மு.க’வின் சட்டமன்ற பிரச்சார நிகழ்வின் தொடக்க நிகழ்வு இது. நவம்பர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்வானது தற்பொழுதும் நடந்துகொண்டிருக்கிறது. இணையத்தில் விளம்பரப்படுத்தல், செய்திதாள், தனியார் தொலைக்காட்சி, பத்திரிக்கை, என இந்த 5 மாத காலமாக குறைந்தது 100 கோடிக்கும் மேல் இந்த ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரம் தி.மு.க’வால் நடத்தப்பட்டு வருகிறது. 100 கோடி குறைந்தபட்சம், இது என்ன சின்ன தொகையா? ஏது பணம்?

5) மக்கள் கிராம சபை கூட்டம் – இது சமீப காலமாக சமூக வலைதளம், தொலைக்காட்சியில் அடிபடும் ஒரு தி.மு.க’வின் நிகழ்வு. கிராமம் கிராமமாக “அ.தி.மு.க’வை நிராகரிக்கிறோம்” என்ற பெயரில் நடத்தப்படும் பிரச்சார தி.மு.க கூட்டம். ஒரு கூட்டத்திற்கு 5 லட்சம் குறைந்தபட்சம் செலவு என்றால் இதுவரை 50 கூட்டங்களுக்கு மேல் நடத்தியுள்ளதாக தி.மு.க’வே கூறுகிறது. இரண்டரை கோடி கூட்ட செலவு அதனை விளம்பர படுத்த 5 கோடி குறைந்த பட்சம் எனில் 7.5 கோடிக்கு பிரச்சாரமா? ஏது பணம்?

கொரோனோ ஊரடங்கு துவங்கப்பட்டு இதுவரை இந்த 5 முக்கிய தி.மு.க நிகழ்வுகளுக்கே தோராயமாக 615 கோடி அளவு செலவு செய்யப்பட்டுள்ளது. இது போக கண்டன பேரணிகள், நிவாரண உதவிகள், நீட் தேர்வு போராட்டம், மதுக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டம், விவசாய மசோதா எதிர்ப்பு போராட்ட செலவுகள் என அது தனி.

இப்படியாக பல நூறு கோடிகள் ஒரே ஆண்டில் செலவு செய்ய ஏது பணம்? இதற்கு தி.மு.க தலைமை கணக்கு வைத்துள்ளதா? அல்லது இவ்வளவு பணம் செலவு செய்து ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லதா செய்வார்கள்? மீண்டும் செலவு செய்த பணத்தை பத்து மடங்காக எடுக்க அல்லவா பார்ப்பார்கள்?

இதற்கு தி.மு.க தலைமை பதில் சொல்லுமா?

%d bloggers like this: