50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்!

திமுகவுடன் கூட்டணி வைக்குமா பாமக என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
திமுகவுடன் கூட்டணி வைக்குமா பாமக என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

நடப்பதை எல்லாம் பார்த்தால்… கேள்விப்படுவதை எல்லாம் நினைத்தால்.. பாமக அந்த முடிவைதான் எடுத்து விடும்போல இருக்கிறது.. இனிதான்அரசியல் களம் சூடு பிடிக்கும் என்றும் தெரிகிறது…!

கடந்த எம்பி தேர்தலில் திமுகவை முந்திக் கொண்டு வந்து அதிமுக பாமகவை உள்ளே இழுத்து போட்டது.. தாராளமான சீட்டுக்களை வாரி வாரி வழங்கியது.. தைலாபுரத்தில் விருந்துடன் அந்த கூட்டணி ஜெகஜோதியாக மின்னியது..!

ஆனால், இந்த முறை அதற்கான அறிகுறியே காணோம்.. கூட்டணியை உறுதி செய்து கொள்ள அதிமுக தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது..

ஆனால், இடஒதுக்கீடு என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து, டாக்டர் ராமதாஸ் அதிரடியை கிளப்பி உள்ளார்.. தேர்தல் நெருங்கும் சூழலில், இடஒதுக்கீடு என்ற விஷயம் அவ்வளவு சுலபம் இல்லை..

அதிமுக

அதிமுக அரசால் இதற்கு உடனடி ஆணை பிறப்பிக்கவும் முடியாது.. அப்படி ஒரு கோரிக்கையை நிறைவற்றவும் எடப்பாடியார் தயாராக இல்லை. இவர்களுக்கு தந்தால், மற்றவர்களும் ஒதுக்கீடு கேட்டு வந்து நிற்பார்கள் என்பதாலும், ஒரு தரப்புக்கு மட்டுமே ஆணை பிறப்பித்துவிட்டால், மற்ற இனத்தவரின் அதிருப்தி ஓட்டுக்களை சம்பாதிக்க வேண்டி வருமே என்ற முடிவில் இருக்கிறார்.. இப்போதே கருணாஸ் ஆரம்பித்துவிட்டார்.. பாமகவுக்கு தந்தால் எங்களுக்கும் தர வேண்டும் என்று இடஒதுக்கீடு கேட்கிறார்.

இட ஒதுக்கீடு

ஆனால், ராமதாஸ் இடஒதுக்கீடு பிரச்சனையை கிளப்பும்போதே, வேறு ஏதோ காரணமாக இருக்கும்.. ராமஸ் பிளான் இல்லாமல் இப்படி செய்ய மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது.. இப்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, நிறைவேற்ற முடியாது என்று தெரிந்துதான், இந்த கோரிக்கையை பாமக தரப்பு முன்வைத்ததாம்.. அதற்கு காரணம், தனித்து போட்டியிடும் முடிவாக இருக்கலாம் அல்லது வேறு விதமான பேரங்களை பாமக நடத்துவதற்குதான் என்கிறார்கள்.

நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகளுடன் நடந்த மீட்டிங்கில், டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “சமுதாய மக்கள் பெரும்பான்மை வசிக்கும் தொகுதிகளில் அதாவது 60 இடங்களில் நாம் தனித்துப் போட்டியிடுவோம்… கண்டிப்பாக 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதானால், நீங்கள் அனைவரும் இதே நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளில் இறங்கவேண்டும்” என்று பேசினாராம். இது நிர்வாகிகள் சிலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு பயத்தையும் ஏற்படுத்தி வருகிறதாம்.

திமுக?

தனித்து போட்டி என்பது பாமக இதுவரை எடுத்த முடிவு இல்லை.. மாறி மாறி கூட்டணி என்றே பழக்கப்பட்ட நிலையில், இந்த முறை இது சாத்தியமா? என்பது சந்தேகம்தான்.. அதோபோல, திமுகவும் பாமகவை உளேளே கொண்டு வரும் முயற்சியில் இறங்குவதாக சொல்லப்படுகிறது.. இன்றைய தேதி வரை, கூட்டணி அதிமுகவுடன் ஏற்படாததால், ஒருவேளை திமுகவுடன் சாத்தியமாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.

என்ன முடிவு?

அப்படியே திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டாலும், பாமகவின் இதே கோரிக்கையை திமுகவாலும் நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகம்தான். ஆக, உள் ஒதுக்கீடு என்பது எதற்கான அச்சாரம் என்பது இப்போதுவரை பிடிபடவில்லை.. அதேசமயம், தனித்துபோட்டி என்ற பேச்சு எழுந்துள்ளதும் எதற்கான அச்சுறுத்தல் என்றும் விளங்கவில்லை.. பார்ப்போம்..!

%d bloggers like this: