வயிற்றுப்புண்ணையாற்றும் வாழை இலை!

நம் பாரம்பரியத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம். சுகாதாரமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பானது தாண்டி, இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
*சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் கெடாமலும், மணமாகவும். இருக்கும்.
*வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்டநாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

*தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
*பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி-யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
*காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெயை துணியில் நனைத்து புண் மேல் தடவி வாழை இலையை மேலே கட்டு கட்டி வந்தால் புண் குணமாகும்.
*சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
*சொரியாசிஸ், தோல் அழற்சி மற்றும் கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையைக் கட்டி வைத்தால் விரைவில் குணமாகும்.
*வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல்நலம் பெறும்.
*மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
*வாழை இலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

%d bloggers like this: