சீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்!

மக்கள் நீதி மய்யத்தை வளைத்து மூன்றாவது அணியின் திட்டத்தை உடைக்க புதிய வியூகத்தை தி.மு.க வகுத்துவருகிறது. இதனால், விரைவில் தி.மு.க கூட்டணிக்குள் பெரும் களேபரங்களே வெடிக்கலாம் என்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சியினர்.

கமல் -ஸ்டாலின்கமல் -ஸ்டாலின்
தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகளைக் கட்டமைப்பதில் கட்சிகள் வேகமெடுத்துள்ளன. தற்போதைய நிலையில் தி.மு.க தலைமையிலான கூட்டணியே வலுவான அணியாக இருக்கிறது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., த.ம.மு.க., முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம்வகிக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியே களத்தில் நின்று பெரும் வெற்றியைப் பெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி பெரும் வெற்றியை ஈட்டும் என்கிற நம்பிக்கையில் கூட்டணிக் கட்சியினர் உற்சாகமாக இருந்தனர். ஆனால், தி.மு.க தரப்பில் கடந்த சில நாள்களாக நகரும் நகர்வுகள் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கிவிடுமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.“தி.மு.க கூட்டணியில் இப்போது பெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியக் கட்சி என்கிற கோதாவில் கோபாலபுரத்தில் கோலோச்சிவந்தது காங்கிரஸ். ஆனால், அந்தத் தேர்தலில் போட்டியிட்ட 41 இடங்களில் எட்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி தி.மு.க ஆட்சிக்கும் வேட்டுவைத்தது. எனவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கும் வேலையை தி.மு.க கையில் எடுக்கவிருக்கிறது. குறிப்பாக, ஐபேக் நிறுவனம் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னமே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நோட் போட்டிருக்கிறது.

ஸ்டாலின் – கே.எஸ்.அழகிரி சந்திப்புஸ்டாலின் – கே.எஸ்.அழகிரி சந்திப்பு
மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சி கடந்தமுறை வாங்கிய சீட்டுகளிலிருந்து குறைந்துவிடக் கூடாது. குறைந்தபட்சம் 30 சீட்டுகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது. `அப்படி தி.மு.க நமக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால், கூட்டணியிலிருப்பதைப் பற்றிக்கூட யோசிக்கலாம்’ என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லி வரை பேசியிருக்கிறார்கள். அப்படி தி்.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வந்தால் கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்கிற திட்டம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. இதற்கும் செக் வைத்து காங்கிரஸ் சீட் பேரத்துக்கு முட்டுக்கட்டை போட தி.மு.க திட்டம் வகுத்திருக்கிறது.

அதாவது, மூன்றாவது அணிக்கு சாத்தியம் என்கிற கருத்தே கமலின் மக்கள் நீதி மய்யத்தை வைத்தே உருவாக்கப்படுகிறது. எனவே, மக்கள் நீதி மய்யத்தை தி.மு.க பக்கம் கொண்டுவரும் வேலையை தி.மு.க-வின் வாரிசுப் புள்ளிகள் கையில் எடுத்திருக்கிறார்கள். கடந்த பத்து நாள்களாக இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துவருகின்றன. காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்துவந்த கமல், இந்தக் கூட்டணி பேச்சையும் சத்தமில்லாமல் மேற்கொண்டுவந்திருக்கிறார். கமலின் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பல சட்டமன்றத் தொகுதிகளில் பெற்றிருந்தது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் இந்தக் கட்சிக்கு இருக்கும் வாக்குவங்கியை தி.மு.க பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதேபோல் கமலின் மக்கள் நீதி மய்யம் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக கால் ஊன்றவில்லை. நிதி நெருக்கடியும் மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது. இந்த பரஸ்பர கணக்குதான் கூட்டணி வரை இரண்டு கட்சிகளையும் கொண்டுசென்றிருக்கிறது. தி.மு.க தரப்பில் 25 சீட்டுகளை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

கமல்கமல்
கமலும் தனித்துப் போட்டியிடுவதைவிட எதிர்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது உத்தமம் என்கிற நிலைக்கு வந்திருக்கிறார். இது குறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கமலுக்கு 25 சீட்டுகள் கொடுத்தால் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 20 சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும். கமல் கட்சியை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் சீட்டைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் கூட்டணியிலுள்ள இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் தலா மூன்று எனவும், ம.தி.மு.க-வுக்கு இரண்டு முதல் மூன்று வரையும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு மூன்று , சிறுபான்மைக் கட்சிகளுக்குத் தலா இரண்டு என்று கணக்கு போட்டுள்ளனர்” என்கிறார்கள்.

இந்தத் தகவல் இப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு தெரிந்து கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்,“தன்மானத்தை விட்டுக்கொடுத்து சீட் பேரத்தில் இறங்க வேண்டாம். குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளையாவது பெற வேண்டும். அதுவும் தனிச் சின்னத்தில் என்பதை தலைவர் விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று ஓப்பனாக திருமாவிடம் பேசியிருக்கிறார்கள். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு இந்தத் தகவல் சென்றிருக்கிறது.“எனது உடல்நிலையே இப்போது சரியில்லை. இவர்களிடம் மல்லுக்கட்டி எப்படி சீட் வாங்குவது என்று புரியவில்லை. எனது மகனை சாத்துார் அல்லது கோவில்பட்டி இரண்டில் ஒரு தொகுதியில் நிற்க வைக்கலாம் என்று நினைத்தேன். இவர்கள் இரண்டு சீட் என்று சொன்னால் ஒரு சீட்டை மகனுக்கா கொடுக்க முடியும்…” என்று புலம்பியிருக்கிறார்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள்தி.மு.க கூட்டணிக் கட்சிகள்
ஏற்கெனவே த.ம.மு.க தரப்பில், “உங்கள் அப்பா இருந்தபோதே நாங்கள் நான்கு தொகுதிகளைப் பெற்றோம். இந்த ஐந்தாண்டு காலம் உங்களுடனே பயணித்திருக்கிறோம்” என்றெல்லாம் உருக்கமாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால், `நிலைமை இதுதான்’ என்று கறார் காட்ட ஆரம்பித்துவிட்டது தி.மு.க. தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டுமே கறார் காட்டும் என்று தெரிந்தே, அந்தக் கட்சிக்கு செக் வைக்க மக்கள் நீதி மய்யத்தை உள்ளே கொண்டுவந்து அரசியல் ஆட்டத்தை நடத்தும் தி.மு.க-வின் திட்டம் அதற்கு சாதகமாகுமா… பாதகமாகுமா என்கிற அச்சமும் உடன்பிறப்புகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

%d bloggers like this: