20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்!

நித்தம் ஒரு தகவல் சசிகலா குறித்து கசிந்து வரும் நிலையில், முழுக்க முழுக்க தன்னை மட்டுமே நம்பி அரசியல் ஆட்டத்தை கையில் எடுக்க போகிறாராம் சசிகலா.. இப்படி ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

இந்த முறை தேர்தல், சசிகலாவின் அதிரடி இல்லாமல் நிறைவு பெறாது என்று மட்டும் தெரிகிறது.. 20 வருடங்களாகவே அதிமுகவை தன்னகத்தே வைத்திருப்பவர் சசிகலா..குமரி முதல் சென்னை வரை அத்தனை அதிமுக ஊராட்சி, நகர தலைவர்கள் முதல் சசிகலாவுக்கு அத்துபடி. சசிகலாவினால் வாழ்வு பெற்றோர், ஆதாரம் பெற்றோர் ஏராளம். இப்போதும் அதற்குரிய விசுவாசத்தை அதிமுகவிற்குள் பலர் காட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.

சசிகலாவின் அரசியல் எத்தகையதாக இருக்க போகிறது? என்ன மாதிரியான செயல்பாடுகளை அவர் முன்னெடுக்க போகிறார் என்பதும் சஸ்பென்ஸ்தான்.. இதை பற்றி ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்ன தகவல்கள்தான் இவை:

பாஜக
“சசிகலாவின் அரசியல் பயணத்தை பாஜக இப்போதைக்கு தடுக்காது.. ஆனால், அதேசமயம், அதிக அளவு சசிகலாவை வளரவும் விடாது.. அப்படி சசிகலா அரசியலுக்கு வந்தால், நிச்சயம் பல நன்மைகள் கட்சிக்கு உண்டு.. ஆதரவாளர்களை எப்போதும் விட்டுத்தர மாட்டார். ஜெயலலிதா விரும்பின கனவை நிறைவேற்ற முயற்சிப்பார். ஒரே குடையின்கீழ் ரத்தத்தின் ரத்தங்களை ஒன்று சேர்ப்பார். திமுகவுக்கு நிச்சயம் டஃப் தருவார்.. ஏன் இந்த 4 வருட காலமாக, பெரிசாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் எடப்பாடியாருக்கு சசிகலா இனி சவாலாக இருப்பார்.

தினகரன்
ஆனால், இதற்கெல்லாம் குடும்பத்தினரின் ஆதரவு சசிகலாவுக்கு முழுமையாக கிடைக்குமா என்பது தெரியவில்லை.. முக்கியமாக, சசிகலா – தினகரனுக்கும் உள்ள புரிதல் வெளிப்படையாக தெரியவில்லை.. சசிகலாவை ஆஸ்பத்திரியில் இருந்து, கார் வைத்து அழைத்து சென்றது டிடிவி தினகரன்தான்.. ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, அவரது உடல்நிலை குறித்து தகவலை தெரிவித்து கொண்டிருந்ததும் தினகரன்தான்.. 2 நாளில் சசிகலா வெளியே வரும்போது, அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதும் தினகரன்தான்.

டிஸ்சார்ஜ்
ஆனாலும், தினகரன்மீது சசிகலாவுக்கு ஏதோ ஒரு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.. டிஸ்சார்ஜ் ஆன பிறகு, சசிகலாவை தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினாரா என்றும் உறுதியாக தெரியவில்லை.. இந்த சமயத்தில் சில அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து பேசியிருக்கிறார் போலும்.. ஆனால், அவர்கள் பேச்சிலும் சசிகலாவுக்கு எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை என்றே தெரியவருகிறது.. சசிகலாவின் எதிர்பார்ப்பும் நமக்கு உறுதியாக என்வென்று தெரியாத பட்சத்தில், எத்தகைய முடிவுகளை அவர் எடுக்க உள்ளார் என்பதும் சஸ்பென்ஸ்தான்.

அரசியல்
அதனால், சசிகலா முழுமையாக தன்னை மட்டுமே இனி நம்பி அரசியல் செய்வார் என்றும், குறிப்பாக தன் மீதுள்ள வழக்குகள் குறித்து, சட்ட ரீதியான போராட்டங்குள் மட்டுமே தனக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறார்.. ஒருவேளை சட்டரீதியாக சசிகலா வெற்றி பெற்று விட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.. அப்படியானால் முதல்வராகவும், அமைச்சராகவும் பதவிக்கு வர வாய்ப்பில்லாத பட்சத்தில் சசிகலா என்ன செய்வார்? அதுவும் சஸ்பென்ஸ்தான்..!” என்கின்றனர்.

%d bloggers like this: