`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி
எதிர்பார்த்த ரியாக்ஷன் கிடைக்க ஆரம்பித்திருப்பதால், எடப்பாடி ஏக குஷியில் இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லாரும் சொல்வதுபோல எளிதாக தி.மு.க வெற்றி பெற்று விடாது என்று உறுதியாக நம்புகிறார்.
தமிழக முதல்வராக நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக கடத்திச்சென்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா விடுதலைக்குப் பிறகு எடப்பாடிக்கு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்புடன் ஒருபோதும் இணக்கமாகப் போக மாட்டோம் என்று டெல்லியில்வைத்து சொன்னவர், சொன்னதுபோலவே சசிகலாவுக்கு செக் வைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.