பெற்றோர்களே! குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.!!

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்கும் போது இந்த தவறினை செய்யக்கூடாது.

குழந்தைகளை நன்கு வளர்த்து பராமரிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய காரியமாகும் . அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக வளர்க்க, ஒவ்வொரு தாயும் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால்

குழந்தைகளுக்கு கிருமிகளினால் நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் என்று பல குழந்தைகள் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை நாம் கொடுக்கின்றோம்.

குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கட்டாயம் டாக்டரின் ஆலோசனையை கண்டிப்பாகப் பெற வேண்டும்.

ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால் குழந்தைகளை கிருமிகள் அதிகமாக தாக்கும் அபாயம் இருக்கிறது. இதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருந்து வீட்டில் இருக்கிறது என்பதற்காக குழந்தைகளுக்கு எடுத்து கொடுக்க கூடாது.

6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை கொண்டு போய் முடிக்கும். குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், அளவுக்கு அதிகமாக கொடுக்கும்போது ஆபத்து நேரிடும். சிலர் குறைவாக மருந்து கொடுத்து குழந்தைக்கு நோய் சரியாகவில்லை என்றால், அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். எப்போதுமே குழந்தைகளுக்கு கண்டிப்பாக நாமாக மருந்து கொடுக்க கூடாது. மருத்துவர் அறிவுரைப்படியே எல்லா மருந்துகளையும் கொடுக்க வேண்டும்

%d bloggers like this: