உடைகிறது அதிமுக கூட்டணி ! “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் !!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுக – அமமுக இணைப்பு நடைபெறவில்லை எனில், 234 தொகுதியிலும் போட்டியிடுவது என சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில அமைச்சர்களை சசிகலா தொடர்பு கொண்டு பேசினார். ஆனாலும் அவர்களில் பலரும் சசிகலா பின்னால் செல்ல பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். காரணம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னால் பாஜக உள்ளதாக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கருதுகின்றனர். தேவையில்லாமல் வருமானவரித்துறை ரெய்டில் சிக்க வேண்டாம் என்றும், இதனால், கொஞ்சம் அமைதியாக இருந்து நகரும் நிகழ்வுகளை கணித்தபின்னர் யார் அணியில் தொடர்வது என முடிவு செய்து கொள்ளலாம் என ரகசிய முடிவு செய்துள்ளார்களாம்.

மேலும், அதிமுகவில் சீட் கிடைக்காத நிலையில் உள்ள ஒரு சில எம்எல்ஏக்கள் மட்டுமே சசிகலாவுடன் தொடர்பில் உள்ளார்களாம். அதிமுகவில் ஒவ்வொரு நொடியும் நடைபெறும் நிகழ்வுகளை அவர்கள் அப்படியே சசிகலாவுக்கு லைவ் ரிப்போர்ட்டாக கொடுத்து வருகிறார்களாம்.

இதனிடையே, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவங்களில் உள்ள தனது ஜாதி மக்கள் தனக்கு ஆதரவாக எப்போதும் இருப்பார்கள் என்று சசிகலா கருதுகிறார். அதற்கு ஏற்றால் போல் காய்ககளை நகர்த்தி வருகிறார். இதனால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் சசிகலா முடிவு செய்துள்ளாராம்.

கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வராத சசிகலா, யாரையும் சந்திக்கவும் இல்லையாம். அடுத்த சில தினங்களில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த உள்ளாராம்.

வரும் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவது அல்லது கடந்த 2019 -ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம் பெற்ற எஸ் டிபிஐ கட்சி மற்றும் நடிகர் கமல், சீமான் உள்ளிட்டவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளாராம்.

மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் உடைக்கும் பணியில் சசிகலா ஈடுபட்டுள்ளாராம். இதில் அவரது முதல் வெற்றியை தேமுதிகவை கைகாட்டுகிறார்கள். மேலும், ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளி வரும் என என்று சசிகலா எதிர்பார்க்கிறார். அவ்வாறு வந்தால் அவர்களுடன் சேர்ந்து தனி அணியை உருவாக்கி போட்டியிடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். இதற்காக பல கோடி ரூபாயை களத்தில் இறக்கிவிட்டுள்ள சசிகலா, அதிமுகவில் உள்ள கட்சிகளை வெளியேற்றி, எடப்பாடி பழனிசாமியை தனிமைப்படுத்தவும் முடிவு செய்து அதில் முதல் வெற்றியும் கிடைத்துவிட்டதாம். இதனால், உற்சாகமான சசிகலா அடுத்தடுத்த பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

%d bloggers like this: