20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்

திமுக 174 இடங்களில் போட்டியிட போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. கூட்டணிகளிக்கு நிறைய சீட் அள்ளி தந்துவிடாமல், அதேசமயம் அவர்களை அனுசரித்து செல்லவுமே இப்படி ஒரு யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் இன்னும் ஒருத்தருடைய கூட்டணியும் முடிவுக்கு வரவில்லை…

பேச்சுவார்த்தையும் பகிரங்கமாக ஆரம்பிக்கவும் இல்லை. ஆனால், மறைமுகமாக பேச்சுவார்த்தை மட்டும் இரு தரப்பிலும் நடந்து கொண்டிருக்கிறது..

அதிருப்தி

அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் மட்டுமே தர முடிவாகி உள்ளதாம்.. 40 கேட்டு கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தி 2 முறை தமிழகம் வந்தும் வெறும் 20 சீட் தானா? என்ற அதிருப்தியில் காங்கிரஸ் உள்ளதாக தெரிகிறது.. அதற்காக கமலுடன் கூட்டணி அமைக்கவும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்தன.. ஒருவேளை அப்படி எதுவும் காங்கிரஸ் போய்விடக்கூடாது என்பதற்காக, 25 சீட் வரை வேண்டுமானால் தரலாம் என்கிறார்கள்.

ஆப்ஷன்கள்

அதேபோல, வைகோ விஷயத்தில் இந்த முறை பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.. ஏனென்றால், அவருக்கும் திமுகவை விட்டால் வேறு ஆப்ஷன்கள் இல்லை.. முதலில் 20 கேட்டிருக்கிறார்.. இதில் 8-க்கு இறங்கி வந்ததாம் திமுக.. இருந்தாலும் வைகோ இரட்டை இலக்கம் என்பதிலேயே பிடிவாதமாக இருப்பதால், அவருடன் எந்தவித அதிருப்தியையும் சம்பாதித்து கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லையாம்.. அதனால் அதிகமாகபட்சமாக 10 ஓகே ஆகும் என்கிறார்கள்..

திருமா

ஆனால், விசிகவுக்கு இதைவிட குறைவாக தருவதற்கான சூழல் உள்ளது.. மிஞ்சி போனால் அதாவது 5 அல்லது 6 சீட் ஒதுக்கலாம்.. 10 நாட்களுக்கு முன்பு கூட, விசிகவுக்கு வெறும் 2 சீட்தான் என்று செய்திகள் பரபரத்தன. அவ்வாறு இல்லாமல் 6 சீட் வரை ஒதுக்கீடு செய்ய திமுக யோசித்து வருகிறதாம். எனினும் இது தங்களுக்கு குறைவு என்றே விசிக நினைக்கக்கூடும்.

கம்யூனிஸ்ட்கள்

இதைதவிர, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 8 சீட் ஒதுக்கீடு செய்யப்படலாம்.. ஆனால் இவர்கள் தான் வைகோவைவிட அதிகமாக சீட் கேட்டவர்கள்.. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட்டணி தலைமைக்கு இப்போது வரை கட்டுப்பட்டு விசுவாசமாக நடப்பதால் ஆளுக்கு 8 சீட் வரை தரப்படலாம்.. ஆனால், இதை இடதுசாரிகள் ஏற்காவிட்டால், இவர்களை கொத்தி கொண்டு போக, கமல் தயாராக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

மெஜாரிட்டி

இதர கட்சிகளான முஸ்லீம் லீக், மமகவுக்கு தலா 2 தர வாய்ப்புள்ளதாம்.. இதைதவிர, கொங்கு மண்டல ஈஸ்வரன், வாழ்வுரிமை கட்சியையும் உள்ளே இழுத்து போட்டு ஆளுக்கு 2 சீட் தரலாம் என்ற யோசனையில் திமுக உள்ளதாக தெரிகிறது.எப்படி பார்த்தாலும் கூட்டணிகளுக்கு கூட, குறைய என்று 60 சீட் ஒதுக்கப்பட்டால்கூட, மிச்சம் 174 இடம் திமுகவின் கையில் உள்ளதால், அதில் 140-ல் மெஜாரிட்டியை காட்ட வேண்டும் என்று உறுதியுடன் உள்ளது..

கமல்

ஒருவேளை இதில் யார் வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு விலகலாமே தவிர, புதிதாக வேறு யாரும் இணைய வாய்ப்பில்லை.. ஏனெனில் கமல் கூட்டணி கதவை அடைத்தாகி விட்டது.. இன்று கே.என்நேருவும் அதை தெளிவுபடுத்தியாகி விட்டது.. அனைவரையும் அனுசரித்து செல்லும் முடிவில் திமுக இப்படி சீட் ஒதுக்க முடிவு செய்தாலும், மற்றதை முடிவு செய்வது அந்தந்த கட்சிகளே.. பார்ப்போம்!

%d bloggers like this: