பெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..

நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, வைட்டமின்கள் தாது உப்புக்கள் போன்றவை தேவையான அளவு இருத்தல் அவசியம்.

தினமும் ஏதாவது ஒரு பழத்தை அவசியம் சாப்பிடுங்கள். முழு தானியங்ளை கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.
அதிக கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உண்ணுங்கள்.
கோழி இறைச்சி, கடல் உணவுகள், முட்டை, சோயாப்பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொட்டைடைகளை உணவில் தவிர்க்காமல் சேர்த்து கொள்ளுங்கள்.
கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.
காலை உணவை சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்.
எட்டு மணி நேர நிம்மதியான தூக்கம் இருக்குமாறுபார்த்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள்.

%d bloggers like this: