வாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்!

நாம் வாழும் வீடு நம் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம். வீட்டை அலங்கரிப்பதற்கு பல்வேறு பொருட்களை நாம் அதிக விலை கொடுத்து வாங்கி வீட்டை அழகு படுத்துவோம். அந்த வகையில் மயில் இறகுகளை வாங்கி உங்கள் வீட்டை அழகுபடுத்தினால் வீடும் அழகாகும் வாஸ்துப்படி உங்களுக்கும் உங்கள்

குடும்பத்தாருக்கும் பல நன்மைகள் கிட்டும். மயில் இறகினால் ஏற்படும் நன்மைகளை இங்கு காண்போம்.

மயிலிறகை வைக்கும் இடம்:

தமிழ் கடவுளான முருகனின் வாகனம் தான் இந்த மயில். அதனால் தான் மற்ற பறவைகளின் இறகு போல அல்லாமல் மயிலின் இறகை மிகப் புனிதமானதாகக் கருதுகிறோம். அதை பூஜையறையில் வைத்தும் வழிபாடு செய்கிறோம்.

பொதுவாக மயில் இறகை கண்ணாடிக்குப் பக்கத்தில், அல்லது பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் அப்படி எல்லா இடங்களிலும் மயிலிறகை வைக்கக் கூடாது. அவற்றிற்கு என சில திசைகளும் இடங்களும் உண்டு. தலைமைத்துவத்தை அதிகரிக்கும் மயிலிறகு:

அலுவலகத்திலோ கல்லூரியிலோ உங்கள் நண்பர்கள் உங்களை சரியாக மதிக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் நீங்கள் மயிலிறகை உங்கள் வீட்டில் வைக்கலாம். இதை வைப்பது மட்டுமல்லாமல் நீங்கள் வெளியே செல்லும் போது ஒவ்வொரு முறையும் அந்த மயிலிறகை பார்த்து விட்டு செல்வது நல்ல பலனை உங்களுக்கு தரும். மேலும் மயிலிறகை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதும் சிறந்த பலன்களை உங்களுக்கு அளித்திடும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு வேலை செய்யும் திறனும் அதிகரிக்குமாம்.

எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாக்கும்: மயில் இறகினை வீட்டுக்கு முன்பு வைத்திருந்தால், வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கும். அப்படி வீட்டின் முன் மயிலிறகை வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கப் பெறும். வீட்டின் முன் வைக்கும் மயிலிறகு ஒற்றையாகவோ கொத்தாகவோ இருக்கலாம். ஆனால் ஒற்றைப்படையில் வைப்பது நல்ல பலன்களை அளிக்கும். மேலும் இவை வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

செல்வம் பெருக:

சிலருக்கு என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவே தங்காது. அப்படி இருப்பவர்கள் வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் செல்வம் பெருகும். பணம், நகை அலமாரியில் ஒரு மயிலிறகை வையுங்கள். செல்வம் அதிகரிக்கவும் நிலைக்கவும் செய்யும்.

தோஷங்கள் நீங்க:

வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களைக் கூட மயில் இறகால் நீக்க முடியும். வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு எட்டு மயிலிறகைப் பயன்படுத்த வேண்டும். எட்டு மயிலிறகையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு வெள்ளை நிறக் கயிற்றினால் கட்டி பூஜை அறையில், வைத்து ஓம் சோமாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வாருங்கள். வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

எந்த ரூமில் வைப்பது:

மயிலிறகு புனிதமான பொருள் என்று சொல்லியிருக்கிறோம். அதனால் இதை திருமணம் ஆன தம்பதிகள் தங்களுடைய படுக்கையறையில் அழகுக்காகவோ மன அமைதிக்காகவோ மயிலிறகை வைத்திருக்கலாமா என்ற கேள்வியும் இருக்கிறது. தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அப்படி படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் யாவும் நீங்கி, நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும். திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும்.

குழந்தைகளின் கல்வி அறிவு அதிகரிக்க:

பலரும் தங்களின் குழந்தைகளின் கல்வியை பற்றி கவலைப்படுவது உண்டு. இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைப்பதை விட மயிலிறகை அவர்கள் படிக்கும் ஸ்டடி ரூமில் வைத்து தினமும் மயிலிறகை வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் அவர்கள் படிப்பு, நடனம், பாடல், தற்காப்பு கலை போன்ற துறைகளில் பல்துறை வித்தகர்களாக மாறுவார்கள்.

%d bloggers like this: