170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக

அதிமுக கூட்டணி பற்றி எந்த தகவலுமே வராத நிலையில், அனுமானமாக ஒரு விஷயம் கசிந்து வருகிறது..!

திமுக கூட்டணி எப்படி இழுபறியில் உள்ளதோ, அதுபோலவேதான் அதிமுக கூட்டணியும் உள்ளது.. இன்னும் ஒரு முடிவுக்கு யாரும் வரவில்லை.. கூட்டணியை அறிவிக்கவும் இல்லை.

இப்போதைக்கு பாமக, பாஜக, தமாகா, புதிய தமிழகம், தேமுதிக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியின் கீழ் வரும் என்று தெரிகிறது.. அதாவது, அதே கூட்டணி இந்த முறையும் தொடர்வதாக அமையும்.

பாஜக

ஆனால், இழுபறி நீடிக்கிறது

எல்லாருமே சீட் நிறைய கேட்டு தலைமைக்கு நெருக்கம் தந்து வருகிறார்கள்.. இதில் பாஜக, பாமக கட்சிகள் அதிமுகவுக்கு மிக முக்கியமானவை.. பாஜகவின் ஆதரவு இல்லாமல், பகைத்து கொண்டும் அதிமுகவால் ஆட்சியை நடத்த முடியாது..

இழுபறி

அதேசமயம், அவர்கள் கேட்கும் 60 சீட் என்பதும் நடக்காத காரியம்.. இதைதவிர அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள முக்கியமான தொகுதிகளையே அவர்களும் கேட்பதாக தெரிகிறது.. எனவே, சீட் எண்ணிக்கை, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றினால்தான் இழுபறி நீடித்து வருகிறது.. அந்த வகையில், பாஜகவுக்கு 20 சீட் தரலாம் என்று முடிவாகி உள்ளதாக தெரிகிறது.. 60 கேட்டார்கள், பிறகு 50 கேட்டார்கள், ஆனால், 20 சீட் என்பதை பாஜக ஏற்குமா என்று தெரியவில்லை.

அதிமுக

இந்த 20 சீட் என்பதுகூட, மத்திய அரசை பகைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.. மற்றபடி தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாமகவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படுகிறது.. இதற்கு காரணமும் உள்ளது.. திமுகவை பொறுத்தவரை வட மாவட்டங்களில் சொந்த செல்வாக்கை பெற்றுள்ளது.. அதனால்தான் பாமக தேவையில்லை என்ற முடிவிற்கும் திமுகவால் தைரியமாக வர முடிந்தது.. ஆனால், அதிமுகவுக்கு இந்த பலம் இல்லை… எனவே பாமகவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது..

சர்வே

அதிமுக தரப்பில் சில தினங்களுக்கு முன்பு ஒரு சர்வே எடுக்கப்பட்டது.. அதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்று கிட்டத்தட்ட 80, 100 தொகுதிகள் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளன.. இந்த தொகுதிகள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி முதல் கரூர் வரையிலான இருக்கக்கூடிய தொகுதிகள்.. அதாவது வன்னியர் பெல்ட் நிறைந்தது.. எனவேதான், பாமக இவ்வளவு பிடிவாதம் காட்டியும் அவர்களிடம் பொறுமையாகவும், ஜாக்கிரதையாகவும் காய் நகர்த்தி கூட்டணிக்குள் இழுத்து போடும் முயற்சியில் அதிமுக இறங்கி வருகிறது.. எனவே பாமகவுக்கு 25 சீட்கள் தரப்படலாம் என்கிறார்கள்..

தேமுதிக

தேமுதிகவை பொறுத்தவரை இந்த முறை பிடிவாதம் அதிகமாகவே உள்ளது.. 41-லேயே உறுதியாக இருக்கிறார் பிரேமலதா.. அதற்கு கீழ் கொஞ்சமும் இறங்கவில்லை.. அதனாலேயே அதிமுக பேச்சுவார்த்தைக்குகூட அழைக்காத நிலைமை உள்ளது.. இருந்தாலும் அந்த கட்சிக்கு 10 சீட் வரை ஒதக்கப்படலாம் என்கிறார்கள்.. மற்றபடி தமாகாவுக்கு 5 முதல் 7 வரையும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்களும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.. அப்படியானால் அதிமுக 170 இடங்களில் களமிறங்க தயாராகி விட்டதாக தெரிகிறது..

%d bloggers like this: