மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..

ஆதார் வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. தங்கள் வங்கிக் கணக்குகளை ஆதார் உடன் இணைக்காவிட்டால், பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய உத்தரவின்படி, 2021 மார்ச் 31 காலக்கெடுவிற்கு முன்னர் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைப்பது கட்டாயமாகும்.

உங்கள் கணக்கை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்து கணக்குகளையும் வாடிக்கையாளர் தளத்துடன் இணைக்குமாறு அரசாங்கம் வங்கிகளைக் கேட்டுள்ளது. ஒவ்வொரு கணக்கிலும் பான் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது..

உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்கள்ளே எளிதாக கண்டுபிடிக்கலாம்.

அதற்கான வழிமுறைகள் :

முதலில் நீங்கள் UIDAI http://www.uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு Check Aadhaar & Bank Account Linking Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடி மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளில் ஒன்றை உள்ளிடவும்.
இப்போது நீங்கள் ஆதார் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்.
இப்போது நீங்கள் OTP ஐ நிரப்பி உள்நுழைவுக்கு கொடுங்கள். உள்நுழைவு அணுகலில், உங்கள் ஆதார் எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க முடியும்..

%d bloggers like this: