சைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா..? சில வீட்டுக் குறிப்புகள் இதோ….

சைனஸ் வலி எவ்வளவு தொந்தரவாக இருக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். தூசி, ஒவ்வாமை, ரசாயனங்கள் அல்லது எரிச்சலூட்டும் பொருட்கள் காரணமாக சைனஸ் தொற்று ஏற்படுகிறது. சைனஸ் பிரச்சனை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ்

என்றழைக்கப்படுகிறது. இவை குறுகிய காலம் மட்டுமே இருக்கும். மற்றொன்று க்ரானிக் ரியோ சைனஸைட்டீஸ் என்றழைக்கப்படுகிறது. இது நீண்ட கால சைனஸ் ஆகும்.

சைனஸ் பிரச்சனையை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் தீவிரமாகும் போது சளி கெட்டியாகி தங்கிவிடும். எனவே ஆரம்பத்திலேயே சைனஸ் அறிகுறியை அறிந்துகொண்டால் பாதிப்பை தவிர்க்கலாம். சில பொதுவான அறிகுறிகளில் தலைவலி, தலைபாரம், சைனஸில் வலி, காதுகள் வலி , பற்கள் வலி, காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் தோன்றினால் தற்காலிக நிவாரணியாக முயற்சிக்கவேண்டிய ஐந்து எளிய வீட்டு வைத்தியம் குறித்து இங்கு காண்போம்.,

நீரேற்றம் : உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். சைனஸ் வலியிலிருந்து நிவாரணம் பெற அதிக திரவங்களை உட்கொள்ள வேண்டும். சூடு தண்ணீர் அருந்துவது நல்லது. திரவங்கள் சளியை மெல்லியதாக்குகிறது. இதனால் நாசி பாதை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

ஆவி பிடித்தல் : சைனஸ் தொல்லையை சமாளிக்க ஆவி பிடித்தல் ஒரு வழக்கமான வழிமுறையாகும். நாசி வழியை சுத்தம் செய்ய நீராவி உதவுகிறது. ஒரு அகலமான பாத்திரத்தில், சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 8-9 புதினா இலைகளை சேர்க்கவும்.ஒரு துண்டை எடுத்து போர்த்தி ஆவி பிடிக்கவும். புதினா நீரிலிருந்து நீராவி எடுத்துக்கொள்வது சைனஸால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் தரும். யூக்கலிப்டஸ் தைலம் கலந்தும் ஆவி பிடிக்கலாம்.

சூப் : சூடான சூப் சைனஸால் ஏற்படும் அசைவுகரியத்தை குறைக்க உதவுகிறது. உங்கள் சுவைக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் சூப்பையும் தேர்வு செய்யலாம். எந்த சூப் செய்தாலும் அதில், மிளகு தூள் சேர்த்து கொள்ளவும். சூப்பில் இருந்து வரும் நீராவி மற்றும் அதில் உள்ள ஆரோக்கியமான பொருட்கள் உங்கள் சைனஸ் தொற்றுக்களை அழிக்க உதவும்.

உப்பு நீர் :உப்பு நீர் கொண்டு நாசிகளை சுத்தம் செய்தால் வீக்கம் குறைவதுடன் மூக்கும் சுத்தமாகும். ஒரு மூக்கின் வழியாக தண்ணீரை ஊற்றி குனிந்து அதனை மறு பக்க மூக்கின் வழியாக வருமாறு செய்யலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. இந்த செயல்முறை எரிச்சலில் இருந்து நிவாரணம் வழங்க உதவுகிறது.

உணவு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு, வெங்காயம் ஆகியவை போதியளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாசி துளைகளில் உள்ள வீக்கத்தை குறைத்து மூச்சுப்பாதையை சீராக்க பூண்டு உதவும். இஞ்சு தேநீர், காய்கறி சூப் குடித்தால் மூக்கடைப்பு குறையும்.

%d bloggers like this: