நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்

நமது இந்துமதத்தில் மத சின்னங்களுக்கு சிறப்பு பங்கு உண்டு. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் என்று சிறப்பான சின்னங்கள் உண்டு. அவற்றை நாம் உண்மையான பக்தியுடன் தரித்துக் கொள்ளும் போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன் , நம்மையும் ஒரு ஒழுக்கமான

வாழ்வியலுக்கு உட்படுத்தும். அத்தகைய சிறப்பு மிக்க மதச்சின்னங்களை தரித்துக் கொள்ளவும் சில நெறிமுறைகள் உண்டு. சைவ மதத்தின் சின்னமான திருநீற்றை உடலில் 18 இடங்களில் அணிந்துக் கொள்ளலாம்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே..

எனத் திருமூலர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.

1) தலை நடுவில் (உச்சி)

2) நெற்றி

3) மார்பு

4) தொப்புளுக்கு சற்று மேல்.

5) இடது தோள்

6) வலது தோள்

7) இடது கையின் நடுவில்

8) வலது கையின் நடுவில்

9) இடது மணிக்கட்டு

10) வலது மணிக்கட்டு

11) இடது இடுப்பு

12) வலது இடுப்பு

13) இடது கால் நடுவில்

14) வலது கால் நடுவில்

15) முதுகுக்குக் கீழ்

16) கழுத்து

17) வலது காதில் ஒரு பொட்டு

18) இடது காதில் ஒரு பொட்டு

இவ்விதமாக திருநீறை அணிவதால் தடையில்லாத ஆன்மிக சிந்தனை நமது மனதை பண்படுத்தும். அளவில்லாத பொருட்செல்வத்துடன் , இறைவனின் அருட்செல்வத்தையும் பெற்றுத் தரும்.

%d bloggers like this: