கூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் – 178 தொகுதிகளில் களமிறங்கும் திமுக

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 178 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கவும் திமுக முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் பின்வருமாறு:

திமுக – 178;

காங்கிரஸ் – 25 ;

இந்திய கம்யூனிஸ்ட் – 7;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -7;

மதிமுக- 5;

விடுதலை சிறுத்தை – 5;

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2;

மனிதநேய மக்கள் கட்சி – 2 ;

கொங்கு மக்கள் தேசிய கட்சி- 2;

தமிழக வாழ்வுரிமைக் கட்சி – 1 என்றளவில் இடங்கள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக, கூட்டணி தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கழக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை திமுக அறிவித்தது. இந்த குழுவில், முன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடி, துணைப்பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், அமைப்புச்செயலாளர் எஸ்.ஆர். பாரதி, உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர். எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பொதுவாக சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் பொதுவாக நான்கில் ஒரு பங்கு இடங்களுக்கு குறையாமல் கேட்டு வாங்குவது வழக்கம். எனவே, தற்போது 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுமாக? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. காங்கிரஸ் அவ்வாறு ஒத்துக்கொள்ளுமாயின்,56 தெகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 178 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும், மனித நேய மக்கள் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். நாளை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் அடுத்தமாதம் 12 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 19 ஆம் தேதி கடைசி நாளாகும். 20 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனுக்களை விலக்கிக்கொள்ள 22 ஆம் தேதி கடைசிநாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

%d bloggers like this: