மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் அதலக்காய்!!!

அதலக்காய் பற்றி பலருக்கும் தெரியாது. இது பாகற்காயை போன்ற வடிவத்தில் இருக்கும். ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். பெரும்பாலும் இது கரிசல் காட்டுப்பகுதிகளில் வளரும். வயல் வரம்புகள் மற்றும் தரிசு நிலங்களிலும் தாமாகவே வளரும் தன்மை கொண்டது.

பார்ப்பதற்கு பாகற்காய் போல இருப்பதால் இதுவும் கசப்பு தன்மை கொண்ட ஒரு காய் தான். ஆனால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இதன் நிறம் கரும்பச்சை ஆகும். அதலக்காயின் மலர்களை ஆண் மலர்கள், பெண் மலர்கள் என பிரித்து வைத்துள்ளனர். இன்று இந்த அதலக்காயின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அதலக்காயின் ஊட்டச்சத்து:

துத்தநாகம், வைட்டமின் C, பாஸ்பரஸ் போன்ற பல விதமான சத்துக்கள் அதலக்காயில் உள்ளது.

இது கிராமவாசிகளால் ஒரு மூலிகை செடியாக கருதப்படுகிறது. மழைக்காலங்களில் அதலக்காய் சமையல் கிராமங்களில் பெயர் பெற்றது.

அதலக்காய் ஆரோக்கிய பயன்கள்:

கசப்பு சுவை கொண்ட உணவுகள் நுண்கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவையாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இந்த அதலக்காய் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை சீராக வைத்து கொள்ளும். இது கசப்பு சுவை கொண்டுள்ளதால் வயிற்றில் உள்ள கிருமிகள் அத்தனையையும் வெளியேற்றி விடும்.

கல்லீரல் கோளாறு காரணமாக மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு அதலக்காய் ஒரு நல்ல மருந்து. இவர்கள் இக்காயை உணவில் சேர்த்து வருவதன் மூலம் மஞ்சள் காமாலையின் தீவிரத்தை குறைக்கலாம். குடலில் புழுக்கள் இருப்பவர்களுக்கு இக்காய் ஒரு நல்ல மருந்து. பாகற்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த அதலக்காயை சேர்க்கலாம்.

உடலில் அதிகப்படியான உஷ்ணம் உள்ளவர்கள் அதலக்காயை எடுத்து வரலாம். உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் எரிச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் மருந்துகள் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஒருபுறம் இருந்தாலும் தங்களது உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பாகற்காயை போலவே அதலக்காயும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இக்காயை பறித்த உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் காய்கள் முளைக்கட்டி வெடிக்க ஆரம்பிக்கும். இதனால் இதன் சுவையும் மாறிவிடும்.

இதை எப்படி சாப்பிடுவது?

*அதலக்காயை அதிக அளவில் வாங்கி வற்றலாக சமைத்து சாப்பிடலாம்.

*இதனை காரக்குழம்பில் பயன்படுத்தலாம். ஆனால் சாம்பாரில் சேர்க்க வேண்டாம்.

*இதனை பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து பொரியலாக சமைத்து நெய் போட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

*இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

*இனி அதலக்காயை பார்த்தால் கண்டிப்பாக வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

%d bloggers like this: